தண்ணீரிலிருந்து  காப்பாற்றுவது மட்டும் கடமை முடிவதில்லை. கடைசி வரை களத்தில் நிற்கும் இயக்குனர் மாரிசெல்வராஜ்.!!

தண்ணீரிலிருந்து  காப்பாற்றுவது மட்டும் கடமை முடிவதில்லை. கடைசி வரை களத்தில் நிற்கும் மாரிசெல்வராஜ்.!!

சென்னை 24: டிசம்பர் 2023 தூத்துக்குடி பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றிய இயக்குனர் மாரிசெல்வராஜ் குழுவினர் அதோடு நில்லாமல் பாதிக்கபட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் அரசு தரும் நிவாரணபொருட்களையும் மிகச்சரியாக கொண்டுபோய் சேர்த்துவருகின்றனர்.

தண்ணீர் சூழப்பட்ட துண்டிக்கப்பட்ட கிராமங்கள் பல கிராமங்களின் மக்கள் இன்னும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை மிகதுரிதமாக பெற்றுகொடுத்தும் வருகின்றனர்.

இன்னும் மீட்கப்படாத கிராமங்கள் பல இருக்கின்றன என்பதை அறிந்து களத்தில் ஓய்வில்லாமல் உதவிவருகின்றனர் மாரி செல்வராஜ் குழுவினர்.