’தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால், ஜிம்மி ஜீன்-லூயிஸ், கே.ஆர். கோகுல், தாலிப் அல் பலுஷி, ரிகா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிளெஸி ஐப் தாமஸ்.
ஒளிப்பதிவாளர் :- சுனில் கே.எஸ்.
படத்தொகுப்பாளர் :- ஸ்ரீகர் பிரசாத்.
இசையமைப்பாளர் :- ஏ.ஆர். ரஹ்மான்.
தயாரிப்பு நிறுவனம் :- விஷுவல் ரொமான்ஸ்.
தயாரிப்பாளர் :- விஷுவல் ரொமான்ஸ்.
மலையாளத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவல் ‘தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’’.
புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ நாவல் வெளி மாநிலங்களில் உள்ள மொழிகள் 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
1990-களின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, இந்த நாவலை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில் தி கோட் லைஃப் -ஆடுஜீவிதம்’ திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
கதாநாயகன் பிரித்விராஜ் தன் மனைவி கதாநாயகி அமலா பால் கேரளாவில் உள்ள ஒரு பகுதியில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் தனது குடும்ப சூழ்நிலைக் காரணமாக எப்படியாவது அரபு நாட்டுக்கு சென்று கொஞ்ச கொஞ்சமாக பணம் சம்பாதித்து வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில், வளமான தனது கிராமம் மற்றும் கர்ப்பமாக இருக்கும் மனைவி கதாநாயகி அமலா பாலை விட்டுவிட்டு சவுதி அரேபியாவுக்கு கதாநாயகன் பிருத்விராஜ் செல்கிறார்.
சவுதி அரேபியாவில் விமானத்தை விட்டு இறங்கியதும் தன்னை அழைத்துச் செல்ல வரவேண்டிய ஏஜெண்ட் வராததால், தவறான ஏஜெண்ட் உடன் சென்று அங்கு உள்ள பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையில் மிரட்டி அமர்த்தப்படுகிறார்.
தனக்கு புரியாத மொழி, தன் எதிர்பார்க்காத வேலை என்று தடுமாறும் கதாநாயகன் பிரித்விராஜ், சில நாட்கள் கழித்தே தான் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையில் அடிமையாக்கப்பட்டதை அறிந்துக்கொள்கிறார்.
அதன் பிறகு அந்த ஆடு மேய்க்கும் வேலைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்வதோடு திடீரென்று ஒரு நாள் தனது முகத்தை கண்ணாடியில் பார்த்து பதறிப்போகிறார்.
தான் இங்கே வந்து பல வருடங்கள் ஆனதை உணர்பவர் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என முயற்சி செய்கிறார்.
அவர் தப்பிக்க எடுக்கும் முயற்சி தோல்வியில் முடிய, வேறு வழி இல்லாமல் இனிமேல் இதுதான் தன் வாழ்க்கை என்று முடிவு செய்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு மீண்டும் அங்கிருந்து தப்பிப்பதற்காக மிகப்பெரிய சந்தர்ப்பம் ஒன்று கிடைக்கிறது.
இந்த முறை தன் எப்படியாவது பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையில் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவில் பாலைவனத்தை கடக்க முயற்சி செய்கிறார்.
பாலைவனத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் கதாநாயகன் பிரித்விராஜ், தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா? என்பதை தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ மீதிக்கதை.
இந்த தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கதையின் நாயகன் பிரித்விராஜின் கதாபாத்திரத்திற்கான கடுமையான உழைப்பு அவரது உடலிலும், நடிப்பிலும் மிகப்பெரிய அளவில் தெரிகிறது.
முதல் காட்சியில் மிக அழகான முகத்துடன் வாட்டசாட்டமான உடலோடு அறிமுகம் ஆகிறவர்.
பாலைவன ஆடு மேய்க்கும் வாழ்க்கைக்குப் பிறகு ஒட்டிய வயிறு, எலும்புகள் தெரியும் உடலமைப்பு என கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதற்காக தன்னை மிகவும் கடுமையாக வறுத்திக்கொண்டிருக்கிறார்.
உடல் மாற்றம் மட்டும் இன்றி தனது குரலிலும் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றத்தை வெளிப்படுத்தியிருப்பவர், பல இடங்களில் தனது சிறு சிறு அசைவுகளின் மூலமாகவே அடிமையாக பல இன்னல்களை அனுபவித்த நஜீமின் வாழ்க்கையை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை எளிதில் கடத்திவிடுகிறார்.
இந்த நஜீமின் கதாபாத்திரத்தில் கதாநாயகன் பிரித்திவிராஜ் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் இவருக்கு கண்டிப்பாக இந்தத் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும்.
இந்த தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ திரைப்படத்தில் அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
பல வருட இடைவெளிக்குப் பின் அமலா பால் திரையில் தோன்றியிருக்கிறார்.
அழகிலும், நடிப்பிலும் மிளிரும் கதையின் நாயகி அமலா பாலின் காட்சிகள் குறைவாக இருப்பதால் அமலா பாலில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றமளிக்கிறது.
கதையின் நாயகன் பிரித்விராஜ் உடன் சவுதி அரேபியாவுக்கு வந்து பாலைவனத்தில் கஷ்ட்டப்படும் கே.ஆர்.கோகுல், கதையின் நாயகன் பிரித்விராஜை காப்பாற்ற முயற்சிக்கும் ஆப்பிரிக்க அடிமையாக நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜூன் லூயிஸ், ஆட்டு மந்தையின் முதலாளியாக நடித்திருக்கும் சவுதி அரேபியா நாட்டுக்காரர் என திரைப்படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதையோட்டத்திற்கு மட்டுமே பயன்படும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுனில்.கே.எஸ், பாலைவனத்தின் வெப்பத்தையும், அங்கு மறைந்திருக்கும் ஆபத்துகளையும் மிக நேர்த்தியாகவும் அருமையாகவும் ஒளிப்பதிவு மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றும் பாடல்கள் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
வசனம் இல்லாத காட்சிகளில் கூட தனது பின்னணி இசை மூலம் அந்த காட்சிகளுக்கும், அதில் கதையின் நாயகன் பிரித்விராஜ் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவலை திரைப்படமாக்குவது என்பது மிகப்பெரிய சவாலான விசயம், அதிலும் நிஜத்தில் ஒரு மனிதன் அனுபவித்த இப்படிப்பட்ட வாழ்க்கையை, காட்சிகளாக சித்தரிக்கும் போது அவை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
பிரித்விராஜின் வாழ்க்கை போராட்டம், மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் விதத்தில் அமைந்திருப்பதோடு, பிரித்விராஜின் கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப ரீதியாக காட்சிகளை கையாண்ட விதம் போன்றவற்றின் மூலம் ஒரு திரைப்படமாக ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும் இயக்குநர் பிளஸ்ஸி, அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.
மொத்தத்தில், இந்த ‘தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ திரைப்படத்திற்கு மத்திய அரசு விருதும் மாநில அரசு விருதும் கண்டிப்பாக கிடைக்கும்.
ரேட்டிங் :- 3.75/5.