தீபாவளி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீசர் வெளி வருகிறது.

சென்னை : 13 நவம்பர் 2020

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் T.R நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

இந்த ஈஸ்வரன் திரைப்படத்திற்காக தனது உடல் எடையை முப்பது கிலோ குறைத்து ஸ்லிம் ஆக மாறியிருந்தார் சிலம்பரசன் T.R.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெறும் நாற்பது நாட்களில் திரைப்படத்தை முடித்து கொடுத்திருக்கிறார்.

பொதுவாகவே சிலம்பரசன் T.R மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் இரவு வெகு நேரம் முழித்திருப்பார். அதிகாலையில் தான் உறங்க செல்வார்.

மதியம் படப்பிடிப்புக்கு வருவார்.

அதுவும் சரியான நேரத்தில் வரமாட்டார்.

சனி ஞாயிறு லீவு கேட்பார்.

கால்ஷீட் சொதப்பல் என பல குற்றச்சாட்டுக்களை திரையுலகினர் வைத்து வருவதை பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறோம்.

தற்போது சூட்டிங்குக்கு சரியான நேரத்தில் வருகிறார்.

எந்த வித பிரச்சினை இல்லாமல் இயக்குனருக்கு ஒத்துழைப்பு தருகிறார்.

சிலம்பரசன் T.R இப்படி ஒரேடியாக மாறி விட்டாரே என தமிழ் திரைப்பட உலகம் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்த நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசரை நாளை தீபாவளியை முன்னிட்டு வெளியிட உள்ளனர் படக்குழுவினர்.

தீபாவளி அன்று அதிகாலை 4.32 மணி பிரம்ம முகூர்த்தம் என்பதால் அந்த நேரத்தை சிலம்பரசன் T.R முடிவு செய்து டீசரை வெளியிட உள்ளனர்.

சிலம்பரசன் T.R மாறிட்டாரு என்பதற்காக இப்படி அதிகாலை நேரத்திலா? டீசரை வெளியிடுவார்கள் என அவரது ரசிகர்களே கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.