இயக்குனர் பா. இரஞ்சித் தயாரிப்பில் பத்தாவது படத்தின் டைட்டில் நாளை வெளியீடு.!!!

சென்னை 05 பிப்ரவரி 2023 இயக்குனர் பா. இரஞ்சித் தயாரிப்பில் பத்தாவது படத்தின் டைட்டில் நாளை வெளியீடு.!!!

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்கள் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல திரைப்படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

இன்னிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை  இரண்டாவது படமாக இயக்கவிருக்கும் படத்தையும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.

இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோ மற்றும்
லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தின் டைட்டில் நாளை வெளியாகவிருக்கிறது.

நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் நாளை வெளியாகவிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.