தீர்க்கதரிசி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5/5.
நடிகர் நடிகைகள் :- சத்தியராஜ், அஜ்மல், ஒய்.ஜி.மகேந்திரன், ஶ்ரீமன், துஷ்யந்த், ஜெய்வந்த், பூர்ணிமா பாக்யராஜ், மூணார் ரமேஷ், தேவதர்ஷினி, மோகன்ராம் உமா பத்மநாபன் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பி.ஜி.மோகன் எல்.ஆர். சுந்தரபாண்டி.
ஒளிப்பதிவு :- ஜே.லக்ஷ்மன் (எம்.எஃப்.எல்).
படத்தொகுப்பு :- ரஞ்சித் சி.கே.
இசை :- ஜி.பாலசுப்ரமனியன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர் :- பி.சதிஷ்குமார்.
ரேட்டிங் :- 3.5 / 5.
சென்னை மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையில் முதன்மை அதிகாரியாக ஸ்ரீமன் பணிபுரிந்து வருகிறார்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி ஒரு மர்ம மனிதன் தொடர்பு கொண்டு சென்னையில் சில இடங்களில் குற்றச் செயல்கள் நடக்கப்போவதாக கூறுகிறார்.
அவர் கூறும் அனைத்து குற்றச் செயல்களும் நடந்து விடுகிறது.
அதன் பிறகு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மறுபடியும் அந்த மர்ம மனிதன் அடையாறில் ஒரு பெண் இன்னும் சற்று நேரத்தில் சாகப்போகிறாள் சீக்கிரம் சென்று அந்த பெண்ணை காப்பாற்றுங்கள்” என்று அந்த மர்ம மனிதன் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போனில் கூறுகிறார்.
ஆனால் அந்த மர்ம மனிதன் கூறியதை அங்கு உள்ள காவலர்கள் மூணார் ரமேஷ் மதுமிதா அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
அந்த மர்ம மனிதன் கூறியது போலவே அந்த பெண் இறந்து விடுகிறாள்.
இதுபோல் இன்னும் நடக்கப் போவதை முன்கூட்டியே கூறுகிறார் அந்த மர்ம மனிதன்.
அந்த மர்ம மனிதன் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் கூறும் அதே தகவலை ஊடகத்திற்கும் கூறுகிறார்.
இதனால் காவல் துறையின் அலட்சியப் போக்கை ஊடகத்தினர் வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர்.
அந்த மர்ம மனிதனை தீர்க்கதரசி என்று மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.
அந்த மர்ம மனிதனை பற்றி விசாரிக்க காவல்துறை அதிகாரி அஜ்மலை நியமிக்கிறார்கள்.
தீவிர விசாரணையில் ஈடுப்பட்டும் அஜ்மலின் குழுவினரால் இந்த செயல்களை செய்வது யார் என்று கண்டுப்பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இறுதியில் யார் இந்த செயல்களை செய்கிறார்? மக்கள் அனைவராலும் போற்றப்படும் தீர்க்கதரிசி இந்த தகவலை கொடுக்க காரணம் என்ன? காவல்துறை இந்த செயல்களை செய்தவர்களை கண்டு பிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த திர்க்கதரசி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த தீர்க்கதரிசி திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்துள்ளார்.
காவல்துறை அதிகாரியாக வரும் அஜ்மல் கதபத்திரத்துக்கு மிகவும் கச்சிதமாக இருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து அஜ்மல் பாராட்டுக்களை பெறுகிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் துஷ்யந்த் மற்றும் ஜெய்வந்த் திரைப்படத்தின் கதாபாத்திரம் தேர்வு அருமையாக இருக்கிறது.
கவுரவக் கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ், தனக்கேயுரிய பாணியில் அசால்டான நடிப்பை, கிளைமாக்ஸில் அதிர்ச்சியையும் கொடுத்து, கதைக்கும் களத்துக்கும் தோள் கொடுத்து தாங்கி நிற்கிறார்.
சத்யராஜ் வரும் காட்சிகள் வடிவமைப்பு மிக மிக அருமை.
இவரின் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.
சத்யராஜின் கதாபாத்திரம் நேர்த்தியாகவும், கதைக்கான பின்னணியை அழுத்தமாகவும் விவரிக்கிறது.
ஸ்ரீமன் அவருடைய கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார்.
ஸ்ரீமன் கதாப்பாத்திரம் தீர்க்கதரிசி திரைப்படத்திற்கு மிகப்பெரிய கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
ஸ்ரீமன் நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் தோன்றி ஸ்கோர் செய்கிறார்.
ஸ்ரீமனின் மனைவியாக வரும் தேவதர்ஷினியும், தந்தையாக வரும் மோகன்ராமும் வெகு இயல்பாக நடித்து, அடுத்து இவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற சந்தேகத்தை திரைப்படம் பார்க்கும் நமக்குள் விதைக்கிறார்கள்.
மனநல மருத்துவராக ஒய்.ஜி.மகேந்திரன் அப்படியே அந்தக் கதாப்பாத்திரத்திற்குப் பொருத்தமானவராக இருக்கிறார்.
சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் அலுவலர்களாக மூணாறு ரமேஷூம், மதுமிதாவும் அருமையாக நடித்திருக்கிறா்கள்.
ஒளிப்பதிவாளர் ஜே. லக்ஷ்மனனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி. பாலசுப்ரமனியன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசையின் மூலம் திரைப்படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளார்
சின்ன சின்ன தவறுகள் தான் என நினைத்து நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் பின்னால் வாழ்க்கையை எவ்வளவு ஆழமாக பாதிக்கும் என இரட்டை இயக்குநர்கள் பி.ஜி. மோகன் எல்.ஆர். சுந்தரபாண்டி சொல்ல முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
சிறிய கதையை எடுத்துக் கொண்டு மிகவும் விரிவான திரைக்கதையில், கடைசி காட்சியில் உடைபடும் சஸ்பென்ஸை தாங்கிக் கொள்ளும் கதையை அமைத்து சிறப்பான நடிகர், நடிகைகளை வைத்து சிறந்த முறையில் செய்து இரண்டு மணி நேரம் சிறப்பான வகையில் நமக்கு பொழுதைப் போக்கும் வகையில் இந்தப் திரைப்படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான பி.ஜி.மோகனும் எல்.ஆர். சுந்தரபாண்டியும். இருவருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள்.
தீர்க்கதரசி திரைப்படத்தின் கதையில் நீரோட்டத்தில் இருந்து திரைக்கதை சற்று கூட விலகாமல் மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் பி. ஜி. மோகன் – எல். ஆர். சுந்தரபாண்டி.
மொத்தத்தில் தீர்க்கதரிசி திரைப்படம் புதுமையான கதை புதுமையான திரைக்கதை புதுமையான முயற்சி.