துணிவு திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.75 / 5.

நடிகர் நடிகைகள் :-  அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர், பக்ஸ், பிரேம், மோகன சுந்தரம், வீரா, தர்ஷன், மகாநதி சங்கர், சிபி, பவனி, அமீர், சிராக் ஜானி, ரித்துராஜ் சிங், சிஜோய் வர்கீஸ், பிர்லா போஸ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எச் வினோத்.

ஒளிப்பதிவு :- நிரவ் ஷா.

படத்தொகுப்பு :- விஜய் வேலுகுட்டி.

இசை :- ஜிப்ரான்.

தயாரிப்பு :-  ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ புராஜக்ட்ஸ்.

தயாரிப்பாளர் :- போனி கபூர்.

ரேட்டிங் :- 3.75 / 5.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை, வலிமை’ என தன் ரசிகர்களை கடந்த இரண்டு திரைப்படங்களில் அதிகமாகவே ஏமாற்றினார் நடிகர் அஜித்குமார்.

ஏற்கனவே வந்த இரண்டு திரைப்படங்கள் ஏமாற்றிய நடிகர் அஜித்குமார் அதையெல்லாம் சேர்த்து வைத்து இந்த துணிவு திரைப்படத்தில் அவருடைய ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்திவிட்டார்.

நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பது இயக்குனர் எச் வினோத்திற்கு இந்த துணிவு திரைப்படத்தில்தான் நன்றாகப் புரிந்திருக்கிறது.

துணிவு திரைப்படத்தில்தான் காட்சிக்குக் காட்சி நடிகர் அஜித்குமாரை ஆட வைத்தும், அதிரடி ஆக்சன் செய்ய வைத்தும் ரசிகர்களை சிரிக்க வைத்தும், மிக அருமையாக நடிக்க வைத்து இந்த பொங்கல் திருநாள் போட்டியில் ‘ஆட்ட நாயகன்’ விருதை வாங்கிக் கொடுத்துவிட்டார்.

சென்னையில் உள்ள பிரபல யுவர்ஸ் தனியார் வங்கியில் உள்ள 500 கோடி ரூபாயை கொள்ளையடிக்க உதவி ஆணையாளரும் சிலரும் சேர்ந்து திட்டமிட்டு ஒரு கொள்ளை கும்பல் உள்ளே நுழைகிறது.

முன்கூட்டியே வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த கதாநாயகன் அஜித்குமாரின் குழுவினரும் வங்கி ஏற்கனவே உள்ளே இருக்கிறார்கள்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ஏற்கனவே வங்கி உள்ள இருக்கும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கதாநாயகன் அஜித்குமார் மோதுகிறார்கள்.

ஒருக்கட்டத்தில் இந்தத் திட்டங்கள் அனைத்தும் என்னுடையது என்று கதாநாயகன் அஜித்குமார் கூறினாலும் கொள்ளையடிக்கும் 500 கோடி ரூபாயை பிரித்துக் கொள்வதில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இரு  கொள்ளை கும்பலும் கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

கதாநாயகன் அஜித்குமாரின் திட்டத்தை நிறைவேற்ற கதாநாயகி மஞ்சு வாரியர் அவருக்கு வெளியில் இருந்து உதவுகிறார்.

அது ஒரு புறம் இருக்க இந்த கொள்ளையை தடுத்து கொள்ளையர்களை பிடிக்க சிட்டி கமிஷனர் சமுத்திரக்கனி தலைமையில் காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கதாநாயகன் அஜித்குமாரின் திட்டப்படி 500 கோடியை  கொள்ளையடித்தார்களா? இல்லையா?  கொள்ளையர்களை காவல்துறையினர் பிடித்தார்களா? பிடிக்கவில்லையா?  என்பதுதான் இநத துணிவு திரைப்படத்தின் மீதிக்கதை.

இநத துணிவு திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித்குமார் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அஜித்குமார் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தத் துணிவு திரைப்படத்தில் அஜித்குமார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பில் மிக அருமையாகவும் நடனத்தில் அமர்க்களமாகவும் ஆக்சன் காட்சிகளை அட்டகாசமாகவும்  அசத்தியுள்ளார்.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் தோன்றும் கதாநாயகன் அஜித்குமாரின் எனர்ஜி திரைப்படத்தின் இறுதிவரை இடம்பெறுவது திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

கதாநாயகன் அஜித்குமாரின் தனது ரசிகர்கள் கொண்டாடுவதற்காகவே இப்படி ஒரு திரைப்படத்தை அவர் தேர்வு செய்துள்ளார்.

கொள்ளையடிக்கும் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கதாநாயகி மஞ்சு வாரியர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெறுகிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி இயல்பான  நடிப்பை கொடுத்து கவனம் ஈர்க்கிறார்.

மேலும் திரைப்படத்தில் வஙகி அதிகாரியாக வரும் ஜான் கொகேன், வங்கி மேலாளராக வரும் ஜிஎம்.சுந்தர், மகாநதி சங்கர், மோகனசுந்தரம், பகவதி பெருமாள், தர்ஷன் என பலரும் தங்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை திரைப்படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது.

பாடல்கள் கேட்கும் ரகம். சில்லா சில்லா பாடல் திரையரங்கை அதிரவைத்துள்ளது.

ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஒளிப்பதிவு மிகப்பெரிய திரைப்படத்திற்கு பலமாக இருக்கிறது.

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் அடிக்கும் கொள்ளையையும், கொள்ளையர்கள் வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடும் விஷயங்களையும் மையக்கருவை வைத்து இயக்குனர் எச் வினோத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

ஆக்‌ஷன் கதையில், மக்களை ஏமாற்றும் வங்கியின் விஷயங்களை சமூக பொறுப்புடன் இயக்குனர் எச்.வினோத் எடுத்திருக்கிறார்.

கதைக்கு தேவையற்ற கதாநாயகன் அஜித்குமாருக்கு மாஸ் காட்சிகள், ஓபனிங் காட்சிகள் போன்று இடம்பெற செய்யாமல் கதைக்கு தேவையான விஷயங்களை மட்டுமே வைத்து மாஸாக இயக்கி இயக்குனர் எச்.வினோத் ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெறுகிறார்.

மொத்தத்தில் துணிவு திரைப்படம் துணிவுப் பொங்கல்.