அருண்பாண்டியன் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் அன்பிற்கினியாள்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்.

சென்னை 03 பிப்ரவரி 2021

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஸ்மோரா’, ‘ஜுங்கா’ போன்ற திரைப்படங்களை இயக்கிய கோகுல் இந்த அன்பிற்கினியாள்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

சக்தி பிலிம் பேக்டரி சார்பில் ‘அன்பிற்கினியாள்’. திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற ஹெலன் திரைப்படத்தை தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என மொழி மாற்றம் செய்துள்ளனர்.

பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வருவதோடு தரமான திரைப்படங்களை வெளியிடும் நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி  சார்பில் பி.சக்திவேலன் தமிழகம் முழுவதும் இந்த படத்தை வெளியிடுகிறார்.

சுமார் 16 ஆண்டு காலம் நடிக்காமல் இருந்த நடிகர் அருண்பாண்டியன் இந்த அன்பிற்கினியாள் திரைப்படத்தில் தந்தையாகவும் அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் மகளாகவும் நடித்திருக்கிறார்கள்.

அன்பிற்கினியாள் திரைப்படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது.

‘அன்பிற்கினியாள்’ வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் மார்ச் 3 தேதி முதல் துவங்குகிறது.