உடனபால் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5 / 5.

நடிகர் நடிகைகள் :- சார்லி, லிங்கம், அபர்னதி, விவேக் பிரசன்னா, காயத்ரி சங்கர், மயில்சாமி, தனம் தீனா, மாஸ்டர் தர்ஷித் சாந்தோஷ், எஸ். மண்யாஸ்ரீ, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கார்த்திக் சீனிவாசன்‌.

ஒளிப்பதிவு :- மதன் கிறிஸ்டோபர்.

படத்தொகுப்பு :- ஜி.மதன்.

இசை :- சக்தி பாலாஜி.

தயாரிப்பு :-  டி கம்பெனி.

தயாரிப்பாளர் :- கே.வி.துரை.

ரேட்டிங் :- 3.5 / 5

தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் 80 முதல் இன்று வரை நடிகர் சார்லி ஏராளமான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருக்கும் சார்லி ஆனால் இதுவரை அவர் நடித்த வேடங்களில் இநத உடன்பால் திரைப்படம்தான் நடிகர் சார்லிக்கு மகுடம் சூடி உள்ளது.

மகுடம் சூடும் அளவிற்கு மிகையில்லாமல் மிக இயல்பாக நடித்து திரைப்படம் பார்ப்பவர்கள் மனதை நெகிழ வைத்துவிட்டார்.

தன் மனைவியை இழந்த குடும்பத் தலைவர் சார்லிக்கு லிங்கா, தீனா இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் காயத்ரி சங்கர் அவருடைய மருமகள் அபர்னதி மருமகன் விவேக் பிரசன்னா சார்லியின் அக்கா தனம் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் அவரது மகள்தான் சார்லியின் மருமகள் என சொந்த வீட்டில் வசிக்கிறார்.

சொந்தமான ஒரு வீடுயில் சார்லி மற்றும் அவரது மூத்தமகன், மருமகள், பேரன், அக்கா என அனைவரும் வசித்து வருகின்றனர்.

இரண்டு மகன்கள், ஒரு மகள் என்ற அவரது குடும்பத்தில் அனைவருக்கும் திருமணம் ஆகி விட மூத்த மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

ஊரிலிருந்து மகளும் மருமகனும் வந்திருக்க குடும்ப சகிதம் காலம் சென்ற சார்லியின் மனைவிக்கு திதி கொடுக்கிறார்கள்.

ஒருநாளும் இல்லாத திருநாளாக தன தாய்க்கு திதி கொடுக்கும் மனது மகனுக்கு வந்ததே என்று அவர் மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரத்தில் அது ஒரு திட்டமிட்ட சதி என்று தெரிகிறது.

மகனும் மகளும் சேர்ந்து திட்டமிட்டு அவரது வீட்டை விற்று தங்களுக்கு சேர வேண்டிய பங்குகை பிரிக்கக் சொல்கிறார்கள்.

மகன் லிங்கா கடனில் சிக்கி கஷ்டப்படுகிறார்.

கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திரும்ப தரவேண்டும் என்பதால் வீட்டை விற்று பணம் கொடுக்க சொல்லி தந்தை சார்லியை நிர்ப்பந்திக்கிறார்.

இதனை ஒப்புக்கொள்ளாத சார்லி மறுத்து விடுகிறார்.

இருக்கும் வீட்டை விற்று விட்டால் எங்கே குடியிருப்பது என்ற நியாயமான கேள்வியுடன் அதை மறுக்கும் சார்லி வழக்கமாக செல்லும் ஒரு கட்டிடத்திற்க்கு செல்கிறார்.

இதனிடையே சார்லி சென்றிருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து அதில் பலர் இறந்துவிட அதில் சார்லியும் சிக்கி இறந்து விட்டார் என குடும்பத்தினர் அனைவரும் ஒப்பாரி வைக்கின்றனர்.

இடிபட்ட கட்டிடத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு அரசாங்க சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி வாங்குவதாக அறிவிக்கின்றனர்.

இறந்தவர்களுக்கு கொடுக்கும் பணத்தை பங்கிட்டு பிரித்து கொள்வதில் மகன் லிங்காவும், மகள் காயத்ரியும் மோதிக் கொள்ள, சார்லி உயிருடன் வந்து அனைவரையும் அதிர வைக்கிறார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வீட்டிலேயே சார்லி இறந்து போகிறார்.

இறந்த சார்லியின் பிணத்தை வைத்து அரசாங்கத்திடம் பணம் பெறுகின்றார்களா? இல்லையா? தன் அப்பாவின் இறுதி சடங்கை எப்படி நடத்தினார்கள்? என்பதுதான் இந்த உடன்பால் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த உடன்பால் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சார்லி நடித்துள்ளார்.

பொறுப்பான குடும்பத் தலைவர் கதாபாத்திரத்தில் சார்லி வாழ்ந்து இருக்கிறார்.

இந்த கதாப்பாத்திரத்திற்கு சார்லியை தேர்வு செய்தது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.

அவருடைய அனுபவ நடிப்பை கொடுத்து அசர வைத்துள்ளார் சார்லி.

பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதிலும் வீட்டை விற்க மறுக்கும் வைராக்கியத்திலும் அவரது அனுபவ நடிப்பு கைத்தட்டல்கள் பெறுகிறது.

லிங்கா இயலாமை, பாசம், கடன் தவிப்புகளை யதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அபர்ணதியும், காயத்ரியும் கதாபாத்திரங்களில் மிக நிறைவாக நடிப்பை கொடுத்துள்ளார்.

காயத்ரி கணவராக வரும் விவேக் பிரசன்னாவின் குசும்புத்தனங்கள் நிரைப்படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.

சார்லியின் சகோதரியாக வரும் தனம், சார்லியின் இன்னொரு மகனாக வரும் தீனா, ஒரு காட்சியில் மட்டும் வந்து போகும் மயில்சாமி கதாபாத்திரங்களும் அனைவரின் நடிப்பு மிகவும் சிறப்பு.

ஒவ்வொருவரின் நடிப்பும் கதைக்கு உள்ள கதாபாத்திரத்திற்கு என்றவாறு உயிர் ஊட்டி உள்ளனர்.

இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் இசையும் திரைப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு சின்ன வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை படமாக்குவதில் உதவியிருக்கிறது.

நடுத்தர குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் உறவுகளை எப்படி சிதைந்து போகிறது என்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சீனிவாசன்.

மொத்தத்தில் உடன்பால்  திரைப்படத்தை குடும்பத்துடன் ரசிக்கலாம்.