உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 இன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

சென்னை 24 ஆகஸ்ட் 2022 உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 இன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.!!

உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்களும், திரையுலகப் பிரியர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.

உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2’ இன்று (ஆகஸ்ட் 24) மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

ஏனெனில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், சுபாஷ்கரனின் லைகா நிறுவனமும் கைகோர்த்து அதிக பட்ஜெட்டில் களமிறங்குகிறது.

அவர் திரும்பி வந்துவிட்டார்” (He Is Back) என்ற டேக் லைனுடன் உலகநாயகன் கமலஹாசன் கம்பீரமாக தோற்றமளிக்கும் வகையில் புதிய மாஸ் போஸ்டர் ஒன்றை வடக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள எழிலகம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்களில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என தெரிவிக்கின்றன.

நடிகை காஜல் அகர்வால் மற்றும் பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நாட்கள் படமாக்கப்படும், பின்னர் உலகநாயகன் கமலஹாசன் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

இந்தியன் 2′ திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சுகன்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், வெண்ணெல கிஷோர், ஜார்ஜ் மேரியன், மனோபாலா, சிவாஜி குருவாயூர், வினோத் சாகர், குல்ஷன் குரோவர், தீபா சங்கர் மற்றும் ஷியாம் பிரசாத். அனிருத் இசையில் இப்போது ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பையும், ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும் கவனிக்கிறார்.