வாத்தி திரைவிமர்சனம் ரேட்டிங்:-3.5/5.

நடிகர் & நடிகைகள் :- தனுஷ், பாரதிராஜா, சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், தனிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நாரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, கென் கருணாஸ், பிரவீணா லலிதாபாய், இளவரசு, ஷரா, பவிஷ், மொட்டை ராஜேந்திரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வெங்கி அட்லூரி.

ஒளிப்பதிவு :- ஜே யுவராஜ்.

படத்தொகுப்பு :- நவின் நூலி.

இசை :- ஜி.வி. பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் – ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்.

தயாரிப்பாளர்:- நாக வம்சி எஸ் – சாய் சௌஜன்யா.

ரேட்டிங் :- 3.5 / 5.

மாணவ மாணவிகளின் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வெளியாகி இருக்கும் திரைப்படம் வாத்தி.

கல்வியை வியாபாரமாகப் பார்த்து கோடிகளை குவிக்கும் கல்வி நிறுவன மாபியா கும்பலை தலைவனை எதிர்த்து மாணவ மாணவிகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து நல்ல பெயரை மட்டும் எடுக்க நினைக்கும் வாத்திக்கும் கல்வி மாபியா கும்பல் தலைவனுக்கும் நடக்கும் போராட்டம்தான் இந்த ‘வாத்தி’ திரைப்படம்‌

வாத்தி திரைப்படத்தின் கதையை பார்த்தால் ஹிந்தி திரைப்பட உலகில் நடிகர் ரித்திக் ரோஷன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் 30 திரைப்படத்தின் கதையின் தழவலாக இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக தமிழ் திரைப்படங்களை போலவே மற்ற மொழி திரைப்படங்களிலும் நடிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் தனுஷ்.

இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நேரடியாக தெலுங்கு திரைப்பட உலகில் வெளியாகியிருக்கும் `வாத்தி` திரைப்படம் மூலம் கனவு நிறைவேறி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அவருடைய ரசிகர்களிடயே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை இந்த வாத்தி திரைப்படம்  ஏற்படுத்தியுள்ளது.

1990 ஆண்டு காலகட்டத்தில் அரசுப்பள்ளிகளில் நிலையான ஆசியர்கள் இல்லாததால், காரணத்தால் தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சிலரை அரசு பள்ளிகளுக்கு ஆசிரியராக பணி அமர்த்தி அந்தந்த அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளே தத்தெடுத்து நடத்தும் என்று அறிவித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார் சமுத்திரக்கனி.

அரசு பள்ளிக்கு தன் பள்ளியில் வேலை செய்யும் கதாநாயகன் தனுஷை ஆசிரியராக நியமிக்கிறார் சமுத்திரகனி.

தமிழக மற்றும் ஆந்திர எல்லையில் உள்ள சோழபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு ஆசிரியராக கதாநாயகன் தனுஷ் செல்கிறார்.

அந்த சோழபுரம் கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு சிறந்த முறையில் கல்வியை கொடுக்க வேண்டுமென நினைக்கிறார் கதாநாயகன் தனுஷ்.

அந்த சோழபுரம் கிராமத்தில் நடந்து வரும் சில மோசடிகள் கதாநாயகன் தனுஷ் அதிர்ச்சியடைய செய்கிறது.

கல்வி வைத்து வியாபாரம் நடத்தும் தனியார் பள்ளி நிறுவனங்களில் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராக வருகிறார் சமுத்திரக்கனி.

கல்விக்கு தனியார் பள்ளிகள்தான் சிறந்தது என்பதை போன்ற மாயையை உருவாக்கி மாணவ மாணவர்களை பெற்றோர்களை ஏமாற்றி அதன் மூலம் கல்வி வைத்து பல கோடிகளை சம்பாதித்து வருகிறார் சமுத்திரக்கனி.

கதாநாயகன் தனுஷ்க்கு வில்லன் சமுத்திரக்கனிக்கு எதிராக ஒரு கட்டத்தில் திரும்ப, இருவருக்கும் பிரச்சனை மிகப்பெரிய அளவில் ஏற்படுகிறது.

இந்த பிரச்சினையின் காரணத்தால் ஆசிரியராக பணிபுரியும், அந்த சோழபுரம் கிராமத்தை விட்டு கதாநாயகன் தனுஷ் அடித்து துரத்தப்படுகிறார்.

இறுதியில் கதாநாயகன் தனுஷ், வில்லன் சமுத்திரகனி இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை கதாநாயகன் தனுஷ் சமாளித்தாரா? சமாளிக்க வில்லையா? ஊரை விட்டு வெளியே துரத்த காரணம் என்ன? என்பதுதான் இந்த வாத்தி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வாத்தி திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வாத்தி திரைப்படத்தின் முழு கதையையும் தனி ஒருவராக தனது தோளில் தாங்கி நிற்கிறார்.
.
காதல், காமெடி, சென்டிமென்ட் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

மாணவர்களை படிக்க வைக்க கதாநாயகன் தனுஷ் கூறும் புது விதமான ஐடியாக்கள் ரசிக்கும்படி உள்ளது.

சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று தனுஷ் பேசும் வசனங்கள் மிகவும் சிறப்பு.

இந்த வாத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா மிகவும் அருமையாக நடித்துள்ளார்.

தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அழகாக வந்து கதாநாயகி சம்யுக்தா அளவான நடிப்பை  கொடுத்துள்ளார்.

கதாநாயன் தனுஷ், கதாநாயகி சம்யுக்தா இடையேயான கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.

மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் கென் கருணாஸ்.

கல்வி மாஃபியா தலைவனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி அவருடைய கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.

தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் சமுத்திரகனி.

கதாநாயகன் தனுஷ் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் மனதில் பதிந்து இருக்கிறார் .

மாணவர்களாக நடித்து இருப்பவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இந்த வாத்தி திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் மற்றும் யுவராஜ் இந்த திரைப்படத்தின் கதையின் தன்மை கேற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கின்றனர்.

தனியார் பள்ளிகளின் கல்வி கொள்ளையை மையப்படுத்தி திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.

மொத்தத்தில் இந்த வாத்தி திரைப்படம் கல்விக்காக அரும் பாடுபட்ட முன்னாள் தலைவர்கள் கர்மவீரர் காமராஜர் மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ஞாபகப்படுத்துகிறது.