வடக்குப்பட்டி ராமசாமி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.75./ 5.

நடிகர் & நடிகைகள் :- சந்தனம், மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், சேசு, தமிழ், ஜான் விஜய், ரவி மரியா, அது பிரசாந்த், ஜாக்லீன், கூல் சுரேஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கார்த்திக் யோகி.

ஒளிப்பதிவாளர் :- தீபக்.

படத்தொகுப்பாளர் :- டி.சிவானந்தீஸ்வரன்.

இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.

தயாரிப்பு நிறுவனம் :- பீபிள் மீடியா ஃபேக்டரி.

தயாரிப்பாளர் :- டி.ஜி.விஸ்வ பிரசாத்.

ரேட்டிங் :- 3.75./ 5.

கதாநாயகன் சந்தானத்தின் குடும்ப சூழல் காரணமாக சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

அவர் வசிக்கும் கிராமத்தினருக்கு காட்டேரியை கண்டால் பயம். அந்த வகையில் ஊர் மக்கள் ஒருவரை காட்டேரி என பயந்து கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகன் சந்தானம் இதே ஊரில் பானை செய்யும் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர்.

கடவுள் இல்லை என்று சொல்லும் கதாநாயகன் சந்தானத்திற்கு அந்த கடவுளை வைத்தே சம்பாதிக்க கூடிய வாய்ப்பு அந்தக் கடவுளே அமைத்து தருகிறார்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது சொந்த இடத்தில் கோவில் ஒன்றை கட்டி, அதன் மூலம் ஊர் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார்.

அந்த கிராமத்தில் உள்ள அந்த மக்கள் அந்த கோவில் மற்றும் அதில் இருக்கும் கடவுள் மீது பக்தியோடும், மிகவும் நம்பிக்கையோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையே கதாநாயகன் சந்தானத்தின் அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த ஊர் கலெக்டர் உத்தரவின் பேரில் அந்த கோவிலை மூடி சீல் வைத்து விடுகிறார்கள்.

கோவில் சீல் வைக்கப்பட்டதால் அநங ஊரில் பல பிரச்சனைகள் நடக்க, ஊர் மக்கள் கடவுள் நம்மை கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையோடும், பக்தியோடு இருந்து வருகிறார்கள்.

ஆனால், கதாநாயகன் சந்தானம் தனது சம்பாத்தியத்திற்காக அரசிடம் இருக்கும் கோவில் நிர்வாகத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சியில் இறங்குகிறார்.

இறுதியில் சீல் வைக்கப்பட்ட கோவில் திறக்கப்பட்டதா? திறக்கப்படவில்லையா?
என்பதுதான் இந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தானம் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக சந்தானம் நடித்திருந்தாலும், கதாபாத்திரமாக நடித்து, மக்களை மகிழ்விப்பதுதான் தன்னுடைய முதல் நோக்கம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.

கதாநாயகன் சந்தானத்திடம் மக்கள் எப்படிப்பட்ட நடிப்பை எதிர்பார்க்கிறார்களோ அதை நிரூபிக்கும் வகையில், அவரது நகைச்சுவையை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ், கதாநாயகிக்கான அடையாளங்கள் இல்லாமல் கதாபாத்திரமாக நினைத்து நடித்திருக்கிறார்.

மாறன் மற்றும் சேசுவின் நகைச்சுவைக் காட்சிகள் திரையரங்கையே அதிர வைக்கிறது.

அதிலும், சேசுவின் பரதநாட்டியம் சிரிக்க தெரியாதவர்களை கூட குபீர் என்று சிரித்து விடுவார்கள்.

எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், கூல் சுரேஷ், இட்ஸ் பிரசாந்த், ஜாக்குலின், கல்கி என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள்.

தாசில்தார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ், தனது வில்லத்தனத்தை நாகரீகமாக கையாண்டு இருக்கிறார்.

படத்தொகுப்பாளர்  டி. சிவனந்தீஸ்வரன பணி காமெடி திரைப்படத்தையும் தாண்டி கவனிக்க வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தீபக் திரைப்படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

கிராமத்து பின்னணியில் கதை நடந்தாலும், சென்னை வார்த்தைகள் மூலம் பாட்டு போட்டிருக்கும்
.
இசையமைப்பாளர் ஷீன் ரோல்டன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் அருமை.

கடவுளை வைத்து சம்பாதிப்பது, கடவுள் நம்பிக்கை குறித்து கூறுவது என சர்ச்சையான கதைக்களத்தில் பயணித்தாலும், திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் திரைப்படத்தின் முதல் காட்சி இருந்து இறுதிக்காட்சி வரை தங்களை மறந்து சிரிக்கும்படி அனைத்து விசயங்களையும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.

மொத்தத்தில், இந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் சிரிக்கலாம் சிரிக்கலாம் படம் முடியும் வரை சிரித்துக் கொண்டே இருக்கலாம்.