வாரிசு திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75 / 5.
நடிகர் நடிகைகள் :- விஜய், ராஷ்மிகா மந்தனா, எஸ்.ஜே. சூரியா, ஆர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், சுமன், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா கிரிஷ், சம்யுக்தா சண்முகநாதன், ஜெயாசுதா, மைம் கோபி, நந்தினி ராய், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், VTV கணேசன், ஜான் விஜய், பரத் ரெட்டி, சஞ்சனா, சதீஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வம்சி பைடிபைலி.
ஒளிப்பதிவு :- கார்த்திக் பழனி.
படத்தொகுப்பு :- பிரவின் கே எல்.
இசை :- தமன் எஸ்.
தயாரிப்பு :- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்:- திஸ் ராஜு, ஷிரிஷ் ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி, ஸ்ரீ ஹர்ஷிதா.
ரேட்டிங் :- 2.75 / 5.
தமிழ் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்யின் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு முன்னிட்டு பல எதிர்பார்ப்புகளுடன் ஜனவரி 11 அன்று இந்த ‘வாரிசு’ திரைப்படம் வெளிவந்துள்ளது.
இதற்கு முன்பு திரைப்படங்களில் ஆக்ஷனை கதைகளை மட்டுமே நம்பி களமிறங்கிய நடிகர் விஜய் இந்த திரைப்படத்தில் குடும்ப சென்டிமென்ட்டை கதையை நம்பி களமிறங்கியிருக்கிறார்.
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபைலி தெலுங்கில் வெளி வந்த தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2016 அன்டு வெளிவந்த “நன்னாகு பிரேமதோ” என்ற திரைப்படத்தின் சாயலில் ஒரு குடும்பக் கதையை எழுதி, சின்னத்திரையில் வரும் மெகா சிரியல் போல இந்த இந்த வாரிசு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் தொழில் அதிபர் சரத்குமார் ஜெயசுதா தம்பதிகளுக்கு முன்று மகன்கள் மூத்த மகன் ஶ்ரீகாந்த், இரண்டாவது மகன் ஷாம், இளைய மகன் கதாநாயகன் விஜய் என மூன்று மகன்கள் உள்ளனர்.
தன்னை போலவே மூன்று மகன்களும் தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் தந்தை சரத்குமார்.
மேலும், தன் குடும்பத்தையும் தொழிலையும் கம்பெனியும் கவனித்து கொள்ள மூன்று மகன்களில் ஒருவரை மட்டும் போட்டி வைத்து தனது வாரிசாக அறிவிக்க நினைக்கிறார்.
இதனால் தன் தந்தையின் செயல் பிடிக்காத கதாநாயகன் விஜய், தந்தை சரத்குமாருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார்.
ஏழு ஆண்டுகள் கடந்து தன் தாய் தந்தைக்கும் 60-வது திருமணத்திற்கு ஏற்பாடு நடக்க கதாநாயகன் விஜயை தாய் தொலைபேசியில் கண்டிப்பாக வரவேண்டும் என அழைக்கிறார்.
தன் தாயின் கட்டாய அழைப்பின் பெயரில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வருகிறார் கதாநாயகன் விஜய்.
வீட்டிற்கு வந்த பின்பு குடும்பத்தில் மூத்த அண்ணன் ஶ்ரீகாந்த், சின்ன வீடு பிரச்சினையில் சிக்கி கொளள இரண்டாவது அண்ணன் ஷாம், 450 ரூபாய் கடன் பிரச்சனைகளால் சிக்கி கொள்ள இருவரும் தன் தந்தையுடன் பிரச்சினையால் இருவரும் வீட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறுகிறார்கள்.
இந்த மூத்த பிள்ளைகளின் பிரச்சனைகள் தந்தை சரத்குமாருக்கு தெரியவர தன்னுடைய தொழிலையும் கம்பெனியும் கவனிப்பதற்காக தன் இளைய மகனை கதாநாயகன் விஜய்யை வாரிசாக அறிவிக்கிறார் தந்தை சரத்குமார்.
இதனால், அண்ணன்கள் ஸ்ரீகாந்த் ஷாம் இருவரும் தன் தம்பி கதாநாயகன் விஜய்க்கு எதிரியாக மாறுகிறார்கள்.
இறுதியில் பிரிந்த குடும்பத்தை கதாநாயகன் விஜய் ஒன்று சேர்த்தாரா? இல்லையா? தனக்கு எதிரியாக மாறிய தன் அண்ணன்களை எப்படி சமாளித்தார் என்பதுதான் இந்த “வாரிசு” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வாரிசு திரைப்படத்தின் கதாநாயகனாக விஜய் நடித்துள்ளார்.
இளைய மகன் விஜய் கதாபாத்திரத்தில் தனக்கான பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார்.
முதல் பாதியில் அமைதியான தாய்பாசம் கொண்ட மகனாகவும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன், காமெடி, என தந்தை பாசம் கொண்ட மகனாகவும் நடிப்பு பல விதமாக பார்க்க முடிகிறது.
வழக்கம் போல் நடனம் ஆடி அசத்தியிருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் துவம்சம் செய்து இருக்கிறார்.
கதாநாயகன் விஜய்க்கு அழகு மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறார்.
இநத வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
திரைப்படத்தில் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிக வேலை இல்லாததால் பாடல் காட்சியில் மட்டும் பயன் படுத்துகிறார்கள்.
கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவிற்கு நடிப்பில் எதுவும் இல்லையென்றாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சியை மட்டும் காண்பித்து இருக்கிறார்.
இநத திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைத்துள்ளார் சரத்குமார்.
பெரிய தொழிலதிபராகவும், தன் மகனின் ஆறுதலுக்கு ஏங்கும் தந்தையாகவும் உடல்நிலை சரியில்லாத போது நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார்.
ஶ்ரீகாந்த் சென்டிமென்ட் காட்சிகளிலும், நடிப்பு ஒகே ரகம்.
ஷாம் கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிகமான வேலை இல்லை என்றாலும் பிரகாஷ்ராஜ் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
யோகி பாபு விஜய்க்கு ஈடு கொடுத்து நடிப்பை அளித்த நகைச்சுவை ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
இந்த திரைப்படத்தில் யோகி பாபு இருந்ததால் மட்டுமே கொஞ்சம் ஜாலியாக இருக்கிறது.
டாக்டர் கதாபாத்திரத்திற்கு பிரபு ஒகே.
விடிவி கணேஷ் ஸ்ரீமன் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும் கைத்தட்டல் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார் எஸ்.ஜே.சூர்யா.
சம்யுக்தா, சதீஷ் ஆகியோருக்கு காட்சிகள் கொடுத்து இருக்கலாம்.
இசையமைப்பாளர் தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
தீ தளபதி பாடல் மாஸ.
ரஞ்சிதமே ரஞ்சிதமே
பாடல் ரசிகளை நடனமாட வைத்துவிட்டது.
இசையமைப்பாளர் தமன்
பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பழனி கார்த்திக் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
ஒரு சில கிராபிக்ஸ் காட்சிகள் கிரீன் மேட் மக மட்டமாக இருக்கிறது.
எடிட்டர் பிரவீன் கே.எல் க்கு என்னதங ஆச்சு.
எடிட்டர் பிரவீன் கே.எல்
ஏறக்குறைய மூன்று மணி நேரப் திரைப்படத்தை அளித்து சற்று சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்து பழகிய கதையை திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் வம்சி பைடிபைலி.
குப்பை தொட்டி போடப்பட்ட கதையை எடுத்து சுத்தம் செய்து பட்டி டிங்கரிங் பார்த்து இந்த வாரிசு திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் வம்சி பைடிபைலி.
மொத்தத்தில் ‘வாரிசு’ திரைப்படம் சின்னத்திரையில் சீரியல் பெரிய திரையில் பார்ப்பது போல உள்ளது.