தயாரிப்பாளர் தில்ராஜ் பேசியது போல எமோஷன் வேண்டுமா எமோஷனும் இருக்கு செண்டி மெண்ட் வேணுமா சென்டி மென்ட் இருக்கு ஃபிளாப் வேணுமா ஃபிளாப்பும் இருக்கு.!

சென்னை 12 ஜனவரி 2023 தயாரிப்பாளர் தில்ராஜ் பேசியது போல எமோஷன் வேண்டுமா எமோஷனும் இருக்கு செண்டி மெண்ட் வேணுமா சென்டி மென்ட் இருக்கு ஃபிளாப் வேணுமா ஃபிளாப்பும் இருக்கு.!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில்  ஜனவரி 11 அன்று  வெளிவந்துள்ள
திரைப்படம் வாரிசு.

இந்த வாரிசு திரைப்படம் அருமையாக வந்திருக்கிறது சண்டை வேண்டுமா சண்டை இருக்கு, எமோஷன் வேண்டுமா எமோஷன் இருக்கு செண்டிமெண்ட் வேணுமா சென்டிமென்ட் இருக்கு, ரசிகர்களுக்கு என்ன வேண்டுமோ அது அனைத்தும் இநத திரைப்படத்தில் இருக்கிறது என்று தயாரிப்பாளர் தில்ராஜ் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.

அவர் கூறியது போல் எல்லாமே இருக்கிறது ஆனால், வாரிசு திரைப்படம் நல்ல இருக்கு என்று கேட்டால் சின்னத்திரை வரும் சீரியல் போல் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

திரைப்படம் நல்ல இருக்க அது மிகப்பெரிய கேள்வி குறி தான்.

ஆமாங்க அதிகாலை 4 மணி காட்சிககு தூக்கத்தை விட்டுவிட்டு, நடிகர் விஜய்யின் வாரிசு நடித்த திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு தாலாட்டுப்பாடி திரையரங்கில் அனைவரையும் தூங்க வைத்துள்ளார் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி.

தமிழ் திரைப்படம் உலகில் இதைப்போல் கதை ஏற்கனவே
பலவிதமான திரைப்படங்களில்
பல இயக்குனர்கள் பயன்படுத்திய அதே கதையை வைத்து கொஞ்சம் தூசி தட்டி பட்டி டிங்கரிங் பார்த்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி.

கதாநாயகன் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தன் தோளில் சுமந்து காப்பாற்ற நினைத்தாலும், கதாநாயகி ராஷ்மிகா மந்தனா அதற்க்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.

நடிகர் விஜய்யுடன் நடிகை  ராஷ்மிகா மந்தனாவிற்க்கு இருக்கும் காட்சிகள் பல செம கிரிங்-ஆக அமைந்துள்ளது.

நடிகர் யோகி பாபு, சரத்குமார், நடிகை ஜெயசுதா ஒரு பக்கம் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க மறுபக்கம் நடிகர் பிரகாஷ் ராஜை வில்லனாக மிரட்டுவார் என நினைத்தால் டம்மியாக ஆக்கிவிட்டார் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி..

கூட்டு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இருந்தாலும் திரைக்கதையில் மிகப்பெரிய அளவில் சொதப்பியுள்ளார்.

மொத்தத்தில் தில்லாக பேசிய தில் ராஜுவின் தலையில் துண்டு விழுவது போல் அமைந்துள்ளது முதல் நாள் விமர்சனம்.

தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ‘ஃபிளாப் வேணுமா ஃபிளாப்பும் இருக்கு’.