பணம் கொடுத்து வாரிசு திரைப்படத்திற்க்கு நல்ல விமர்சனம்? வசமாக சிக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு.!

சென்னை 18 ஜனவரி 2023 பணம் கொடுத்து வாரிசு திரைப்படத்திற்க்கு நல்ல விமர்சனம்? வசமாக சிக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு.!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில்  ஜனவரி
11-ஆம் தேதி அன்று தமிழில் வெளியானது.

பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வந்த இந்த திரைப்படம், நடிகர் விஜய் ரசிகர்களையே கவராமல் இருந்தது.

ஆனால், இந்த வாரிசு திரைப்படத்தை பார்த்த தெலுங்கு ரசிகர்கள், நிரைப்படம் அருமையாக உள்ளது என்று கமெண்ட் பதிவிட்டு வந்தனர்.

இது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்நிலையில், இந்த வாரிசு திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்களை சொல்வதற்கு, தயாரிப்பாளர் தில் ராஜு பணம் கொடுத்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, வாரிசு திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள ரசிகர்கள், அச்சு அசல் ஒரே மாதிரியான கமெண்ட்ஸ்களையே பதிவிட்டுள்ளனர்.

ஒரு எழுத்து கூட மாறாமல் இருப்பதை பார்க்கும்போது, இது பணம் கொடுத்து போடப்பட்டு கமெண்ட்டுகள் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.