விஜயானந்த் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5
நடிகர் நடிகைகள் :- நிஹால், சிரி பிரஹலாத், ஆனந்த் நாக், வினயா பிரசாத், பாரத் போபனா, அர்ச்சனா கொட்டிகே, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ரிஷிகா சர்மா.
ஒளிப்பதிவு :- கீர்த்தன் பூஜாரி.
படத்தொகுப்பு :- ஹேமந்த் குமார்.
இசை :- கோபி சுந்தர்.
தயாரிப்பு :- விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- டாக்டர்.ஆனந்த்
சங்கேஷ்வர்.
ரேட்டிங் :- 3.25 / 5
கன்னட திரைப்பட உலகில் விஜயானந்த் உருவாக்கி இயக்குனர் ரிஷிகா சர்மா தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி திரைப்படமாக வெளி வருகிறது.
கர்நாடகாவில் மிகப்பெரிய தொழிலதிபராக வாழ்ந்து வரும் விஜய் சங்கேஸ்வரரின் பயோபிக் கதையை தழுவி விஜயானந்த் என்ற திரைப்படம் உருவாகி பான் இந்தியா திரைப்படமாக வெளி வந்திருக்கிறது
மிகப்பெரும் லாஜிஸ்டிக் நிறுவனமான வி ஆர் எல் நிறுவனம் எப்படி உருவாகி எப்படி வெற்றி பெற்றார் என்பதை இந்த விஜயானந்த் திரைப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரிஷிகா சர்மா.
கதாநாயகன் விஜய் சங்கேஸ்வரர் தந்தை பி.ஜி. சங்கமேஸ்வரர் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார்.
அவருக்கு மூன்று மகன்கள் அதில் ஒருவர்தான் கதாநாயகன் விஜய் சங்கேஸ்வர் தனது முனறு மகன்களுக்கும் பிரிண்டிங் பிரஸ் தொழிலைக் கற்றுக் கொடுக்கிறார் தந்தை பி.ஜி. சங்கேஸ்வர்.
இந்த பிரிண்டிங் பிரஸ் தொழிலை மட்டுமே செய்து வந்தால் அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியாது என மகன் விஜய் சங்கேஸ்வர் முடிவு செய்கிறார்.
லாரி சர்வீஸ் தொழில் செய்ய விரும்புகிறார்.
இந்தத் தொழில் செய்வதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்தார்.
தந்தை மறுப்பு தெரிவித்ததை மீறி, கடன் வாங்கி, ஒரு லாரியை வாங்கி தொழிலை ஆரம்பிக்கிறார் கதாநாயகன் விஜய் சங்கேஸ்வர்.
அதன்பிறகு அவர் எதிர்பார்த்த அளவிற்கு எதுவும் வளர்ச்சி இல்லாமலும் லாபமில்லாமல் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து விடுகிறார்கள்.
ஒரு தொழிலில் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நான்கு லாரிகளை வாங்குகிறார் கதாநாயகன் விஜய் சங்கேஸ்வரர்.
ஒரு பக்கம் தொழில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்க, மறுபக்கம் இன்னல்களும் வர தொடங்குகிறது.
இறுதியில் கதாநாயகன் விஜய் சங்கேஸ்வரருக்கு வரும் இன்னல்களை சமாளித்தாரா? சமாளிக்க முடியவில்லை? மிகப்பெரிய தொழிலதிபர் ஆனார்? ஆகவில்லையா? என்பதுதான் இநத விஜயானந்த் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த விஜயானந்த் திரைப்படத்தில் கதாநாயகனாக
நிஹால் நடித்து இருக்கிறார்.
விஜய் சங்கமேஸ்வார்
கதாபாத்திரத்திற்கு நிஹால்
மிகவும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் நிஹால் மனைவியாக நடித்திருக்கும் சிரி பிரகலாத் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்..
நடிகர் ஆனந்த் நாக் அனுபவ நடிப்பை மிகவும் அருமையாக கொடுத்து இருக்கிறார்.
பாரத் போபனா, நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் என்றே சொல்லலாம்.
இந்த திரைப்படத்தில் பின்னணி இசையில் கவனிக்க வைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் கோபி சுந்தர்.
ஒளிப்பதிவாளர் கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப மிக அருமையாக காட்சிப்படுத்திருப்பது சிறப்பு.
ஹேமந்த் குமார் படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.
ஒருவரின் வாழ்க்கை வரலாறின் கதையை திரைப்படமாக எடுக்கும்போது மிகவும் ஜாக்கிரதையாக என்ன நடந்தது அது மட்டுமே எடுக்க வேண்டும்.
அப்படி ஒரு வாழ்க்கை வரலாறு எடுத்து கொண்ட இயக்குனர் ரிஷிகா சர்மா, திரைக்கதையில் எந்த சமரசமும் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக இயக்கி இருக்கிறார்.
மொத்தத்தில் விஜயானந்த் பயோபிக் திரைப்படத்தை ரசிக்கலாம்.