வெப்பன திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- குகன் சென்னியப்பன்.
ஒளிப்பதிவாளர் :- பிரபு ராகவ் .
படத்தொகுப்பாளர் :- கோபி கிருஷ்ணா.
இசையமைப்பாளர் :- ஜிப்ரான்.
தயாரிப்பு நிறுவனம் :- மில்லியன் ஸ்டுடியோ.
தயாரிப்பாளர்:- எம் எஸ் மன்சூர்.
ரேட்டிங் 2.5./5.
தமிழகத்தில் பிரபல யூடியூபராகவும், இருந்து வரும் கதாநாயகன் வசந்த் ரவி சுற்றுச்சூழல் மீது அதிக ஆர்வமாக இருந்து வருகிறார்.
கதாநாயகன் வசந்த் ரவி நடத்தி வரும் யூட்யூப் சேனலில் சூப்பர் ஹியூமன்ஸ் பற்றி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வீடியோ பதிவிடுகிறார்.
சாதாரண மனிதனுக்கு இருக்கும் சக்திகளைத் தாண்டி, சூப்பர் ஹியூமன் சக்தி வாய்ந்த மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என அழுத்தமாக நம்புகின்றார் கதாநாயகன் வசந்த் ரவி.
இந்தநிலையில், தேனி அருகில் லாரி விபத்தில் ஒரு சிறுவன் சிக்க இருக்கும் நிலையில் அறியப்படாத மாபெரும் சக்தியால் அந்த சிறுவன் காப்பாற்றப்படுகிறான்.
கதாநாயகன் வசந்த் ரவி மற்றும் அவருடைய நண்பர்களுடன் அந்த சிறுவனை விபத்திலிருந்து காப்பாற்றிய அறியப்படாத மாபெரும் சக்தியை தேடி தேனிக்கு சொல்கிறார்கள்.
பிளாக் சொசைட்டிக்கு கேங்குக்கு உலகளவில் தலைவராக இருக்கும் வில்லன் ராஜீவ் மேனன் சமூகத்திற்கும், மட்டுமல்லாமல் சுற்றுசூழலுக்கும் எதிரான செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
இவர்களுக்கு சமூகத்திற்கும், மட்டுமல்லாமல் சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாதென மிரட்டல் விடுக்கப்படுகிறது.
பிளாக் சொசைட்டிக்கு தலைவர் வில்லன் ராஜீவ் மேனன் கேக்கில் உள்ள மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக தொடர்ச்சியாக உயிரிழக்கின்றனர்.
இதற்கு காரணம் சூப்பர் ஹியூமன் என்பதை அறிந்து கொள்ளும் பிளாக் சொசைட்டிக்கு தலைவர் வில்லன் ராஜீவ் மேனன், அதைப்பற்றி தெரிந்து கொள்ள சூப்பர் ஹியூமனை தேடி செல்கிறார்.
இந்த நிலையில் கதாநாயகன் வசந்த் ரவியும், பிளாக் சொசைட்டிக்கு தலைவர் வில்லன் ராஜீவ் மேனனும் சூப்பர் ஹியூமனை பிடி சென்றார்கள் கண்டுபிடித்தார்களா.? கண்டு பிடிக்கவில்லையா.? என்பதுதான் இந்த வெப்பன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வெப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக வசந்த் ரவி நடித்துள்ளார்.
இந்த வெப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி, இடைவேளைக்கு முன் சாதுவாகவும், இடைவேளைக்குப் பின் அதற்கு நேர்மாறான கதாபாத்திரத்திலும் மிக அருமையாக நடித்துள்ளார்.
கதையின் நாயகனான சத்யராஜ் ஆக்ஷன், நடிப்பு, செண்டிமெண்ட் என குறையில்லாத நடிப்பை கொடுத்து அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சூப்பர் ஹியூமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் அதிரடியாகவும் அருமையாகவும் அற்புதமாகவும் மேஜிக் செய்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தான்யா ஹோப் தனது பணியை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.
பிளாக் சொசைட்டிக்கு தலைவர் வில்லன் ராஜீவ் மேனன் கதாபாத்திரத்தில் பிளாக் டெவில் உடை மற்றும் தோற்றத்தில் மிரட்டி இருக்கிறார்.
ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ், மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் சுமாராக உள்ளது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
வெப்பன் திரைப்படம் சூப்பர் ஹியூமன் கதையை சார்ந்து இருப்பதால் திரைப்படத்தின் முதல் பாதியில் அடுக்கடுக்கான கதைகள் சொல்லும் இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இதனால் கதை எதை நோக்கி பயணிக்கிறது என திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு குழப்பம் வருகிறது.
புதுமையான கதையை எடுத்திருக்கும் இயக்குநர் குகன் சென்னியப்பன் இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கிறோம்.
மொத்தத்தில் – இந்த வெப்பன் திரைப்படம் மக்களுக்கு புரியாத புதிர் ?