சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது? யார் முதல்வர் வேட்பாளர்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
விரைவில் கட்சி தொடங்குவார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் இன்று சற்றுமுன் கட்சி தொடங்குவது குறித்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்த சந்திப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
போயஸ் கார்டன் முதல் ராகவேந்திரா மண்டபம் வரை ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே நின்று கொண்டு தலைவா வாழ்க.. வருங்கால முதல்வர் ரஜினி என கோஷம் போட்டனர்.
இந்த சந்திப்பின் போது நடந்தது என்ன? என்ற சில தகவல்கள் கிடைத்துள்ளன.
கட்சி தொடங்குவது எப்போது என்பதை தெரிவிக்கவில்லையாம். ஆனால் 2021 ஜனவரியில் கட்சி தொடங்க வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது.
ஆனால் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுப்பேன். பொறுமையுடன் காத்திருங்கள் என்று சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் சொன்னதாக தெரிகிறது.
மேலும் கட்சி தொடங்கினால் உருவாகும் சாதக பாதககங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தாராம் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.
மேலும் சில நிர்வாகிகளை எச்சரித்தும் அவர்களின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என ரஜினிகாந்த் பேசினாராம்.
பணம் சம்பாதிக்கும் வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் கட்சியில் இருக்க வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.
கட்சி ஆரம்பித்தால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என கலந்துக் கொண்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ரஜினிகாந்த் தரப்பில் அதிகாரப்பூர்வமாக செய்தி எதுவும் வெளியாகவில்லை. எனவே இந்த தகவல்கள் எந்தளவு உறுதி என்பதை சொல்ல முடியாது.
இறுதியாக ஆலோசனை முடிந்தபின் மாடியில் நின்று சாலைகளில் நின்றிருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்தார் ரஜினிகாந்த்.
தனது போயஸ் கார்டன் இல்ல வாசலில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.
கட்சி ஆரம்பிப்பது எப்போது முதல்வர் வேட்பாளர் யார் என்பது ரஜினிகாந்துக்கு மட்டுமே வெளிச்சம்.
எனவே காத்திருப்போம்…