யசோதா திரை விமர்சனம் ரேட்டிங்:- 2.5 /5
நடிகர் நடிகைகள் :- சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, காவ்யா, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஹரி ஹரிஷ்.
ஒளிப்பதிவு :- எம்.சுகுமார்.
படத்தொகுப்பு :- மார்த்தாண்டன். கே.வெங்கடேஷ்.
இசை :- மணிசர்மா,
தயாரிப்பு :- ஸ்ரீதேவி மூவிஸ்.
ரேட்டிங் :- 2.5 / 5.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
தெலுங்கு திரைப்பட உலகில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலங நடிகர் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து திரைப்பட துறையில் அறிமுகமானார்.
இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார்.
குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நடிகைகள் மற்றும் பிரபலங்கள் குழந்தை பெற்றால் அழகு வீணாகிவிடும் என்று வாடகைத்தாய் முறையை பயன்படுத்த ஏன் அவ்வளவு விதிமுறைகள் இருக்கு என்பதை புரிந்து கொள்ள நிச்சயம் சமந்தாவின் யசோதா திரைப்படம்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கதாநாயகி சமந்தா இவர் தாய் தந்தை இல்லாமல் ஒரு தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.
தனது தங்கையின் ஆபரேஷன் செலவுக்கு பணம் தேவைப்படுவதால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுக்க முடிவு செய்கிறார்.
முன்று மாதம் ஆன நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
கதாநாயகி சமந்தாவை போலவே பல பெண்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அங்கு வந்திருக்கிறார்கள்.
மற்ற பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் இறந்து விடுகிறார்கள்.
இதை கண்டு பயப்படும் கதாநாயகி சமந்தா,பல பெண்கள் இறப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்கிறார்.
இறுதியில் அந்த மருத்துவமனையில் இருக்கும் மர்மம் என்ன? பெண்கள் இறக்க காரணம் என்ன? உண்மையை கதாநாயகி சமந்தா கண்டுபிடித்தாரா? இல்லையா.? என்பதுதான் இநத யசோதா திரைப்படத்தின் மீதிக்கதை.
இநத திரைப்படத்தில் நடிகை சமந்தா கதாநாயகி நடித்துள்ளார்.
இநத யசோதா திரைப்படத்தில் யசோதா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் கதாநாயகி சமந்தா.
மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தங்கை மீது உள்ள பாசம் சென்டிமென்ட், ஆக்சன் என நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
குறிப்பாக கதாநாயகி சமந்தா சண்டைக் காட்சிகளில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
பல பெரிய கதாநாயகர்கள் நடிக்க வேண்டிய கதையில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் கதாநாயகி சமந்தா.
இநத யசோதா திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லியாக கலக்கி இருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார்
அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, காவ்யா, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா, உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை மிக் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் மணிஷர்மாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுகுமாரின் ஒளிப்பதிவு மிக் மிக சிறப்பு.
இயக்குனர் மனதில் நினைத்ததை ஒளிப்பதிவாளர் சுகுமார் நிரூபித்து விட்டார்.
மார்த்தாண்டன் – கே.வெங்கடேஷ் படத்தொகுப்பு அருமையாக உள்ளது.
ஏற்கனவே தமிழ் ஹிந்தியில்
வாடகைதாய் கதையை வைத்து
அது திரைப்படங்கள் வந்துவிட்டது.
இந்த யசோதா திரைப்படத்தை
கிரைம் திரில்லர் பாணியில் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ்.
அனைத்து கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ்.
மெத்த திரைப்படத்திலும் கஷ்டப்பட்டு விட்டு VFX – யில் கோட்டை விட்டு விட்டார்கள்.
VFX – யில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் யசோதா திரைப்படம் சுமார் ரகம்.