ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் !
ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் !
சென்னை 18 ஏப்ரல் 2023 தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில், புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது.
Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர்.
பள்ளியில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் வியோம், அவனுக்கு தன்னுடன் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் தாரா மீது ஈர்ப்பு வருகிறது.
அவனும் தாராவும் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நாளில் தாரா காணாமல் போகிறாள், அதைத்தொடர்ந்து, தாராவின் உடல் ஏரியில் கிடைக்கிறது.
தாரா மரணத்தால் உடைந்து போகும் வியோம், தனது நண்பர்களின் உதவியுடன் தாராவிற்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.
பரபரப்பான திருப்பங்களுடன் பள்ளி மாணவர்கள் துப்பறியும் ஒரு புதுமையான திரில்லராக, மலைநகர பின்னணியில் இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது.
நடிகை அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப குழு
இயக்குநர்: விஷால் வெங்கட்
தயாரிப்பாளர்: ஃபாசிலா அலானா, கம்னா மெனேசஸ்
தயாரிப்பு நிறுவனம்: Sol Production Pvt.Ltd
திரைக்கதை & வசனம்: N பத்மகுமார், ரோஹித் நந்தகுமார்
எடிட்டிங் : மதிவதனன் J
ஒளிப்பதிவாளர்: P.M. ராஜ்குமார்
இசை: சுதர்சன் M குமார்
“அயலி” , “செங்கலம்” வெப் சிரீஸ்களின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, இந்த “ஒரு கோடை Murder Mystery” வெப் சீரிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பான அனுபவம் தரும் “ஒரு கோடை Murder Mystery” வெப் சீரிஸை ZEE5 தளத்தில் 2023 ஏப்ரல் 21 முதல் கண்டுகளியுங்கள்.