ஓணம் பண்டிகையில் ரசிகர்களுக்கு தலைவரின் ‘தர்பார்’ ட்ரீட்

லைகா நிறுவனத்திற்காக முருகதாஸ் இயக்கி வரும் ‛தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2020 பொங்கலுக்கு வெளியிட இருப்பதால் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் நடிகை நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வெளியாது. அதன்பின்னர் நிறைய படங்களை திருட்டுத்தனமான சிலர் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இன்று ஓணம் பண்டிகையான (செப்.,11) மாலை 6.30 மணிக்கு தர்பார் பட 2வது போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!