தளபதி நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் எப்போது வந்தாலும் சாதனை படைப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

2017 தீபாவளிக்கு தளபதி நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியானது.

2018 தீபாவளிக்கு தளபதி நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானது.

2019 தீபாவளிக்கு தளபதி நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியானது.

இதன் மூலம் தொடர்ந்து முன்று வருடம் தீபாவளிக்கும் தளபதி நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது.

தற்போது 4வது முறையாக தீபாவளியை இந்தாண்டும் 2020 தீபாவளியை தளபதி நடிகர் விஜய் குறி வைப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு தினம்தோறும் அதிகரித்து வருவதால் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என எவருக்கும் தெரியவில்லை.

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடமான திரையரங்குகள் திறக்கப்படுவதும் தெரியவில்லை.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊரடங்கு முடிந்து சகஜ நிலைக்கு வந்து இன்னும் 2 மாதங்களில் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்குகளுக்கு வர மாட்டார்கள். இதனால் வசூல் பாதிக்கும்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உள்ள மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளிலும் திரையரங்குகள் திரையிடுவதில் சிரமம் ஏற்படலாம்.

எனவே நிலைமை சீரான பிறகு தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடுவதை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் எப்போது வந்தாலும் சாதனை படைப்பார் என அப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்க்கது.

அடுத்த மாதம் ஜீன் 22ஆம் தேதி தளபதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் பட டிரைலர் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

error: Content is protected !!