தூக்கத்தில் நடப்பவர்களை பற்றிய குறும்படம் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு கிடைத்த சர்வதேச விருது கிடைத்தது உள்ளது!
தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் நடித்த பல திரைப்படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.
தற்போது இணையத்தொடர்களில் அதிகமாக நடித்துவரும் அவர் தற்போது இயக்கத்திலும் கால்பதித்துள்ளார்.
அவர் முதன் முதலாக இயக்கிய தி ஸ்லிப்வாக்கர்ஸ் என்ற குறும்படம் தூக்கத்தில் நடப்பவர்களைப் பற்றியது ஆகும்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த நிலையில் இணையத்திலேயே நடக்கும் குறும்பட விழாக்களுக்கு இந்த குறும்படத்தை அவர் அனுப்பியுள்ளார்.
அதில் பாம்ஸ் ஸ்ப்ரிங் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபெஸ்ட் என்ற குறும்பட விழாவில் அவரது குறும்படத்துக்கு சிறந்த குறும்படம் என்ற விருது கிடைத்துள்ளது.
நடிகை ராதிகா ஆப்தே இயக்கிய தெ ஸ்லிப்வாக்கர்ஸ் என்ற குறும்படத்துக்கு சர்வதேச திரைப்பட விருது விழா ஒன்று கிடைத்துள்ளது.
இதை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே
.











