தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது: ஆளுநர் புகழாரம்
தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியத்தைக் கொண்டது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
பிரிட்ஜ் அகாடமி ஊடக கல்வி மற்றும் நுண்கலை கல்லூரியின் சார்பாக சென்னையில் பிரிட்ஜ் தேசிய மாநாடு நடைபெற்றது. சென்னை குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மூன்று நாள் நடைபெற்ற இந்த பிரிட்ஜ் தேசிய மாநாட்டில் பரதநாட்டியம், கர்நாடக இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு நுண்கலைகளுக்கான கருத்தரங்கம், கண்காட்சி, முன்னணி மற்றும் மூத்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி ஆகியவை கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று மூத்த கடம் இசை மேதை பத்மபூஷண் விக்குவிநாயக்ராம், பரதநாட்டிய மேதை நிருத்ய சூடாமணி சி வி சந்திரசேகரன் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான விழாவில் வருகை தந்த விருந்தினர்களை பிரிட்ஜ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் ரகுராமன் அவர்கள் வரவேற்றார்.
அவர் பேசுகையில்,“பிரிட்ஜ் அகாடமியின் ‘பிரிட்ஜ் தேசிய மாநாடு’ மூன்று நாட்கள் நடைபெறுவதற்கு, பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு அளித்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் கருத்தரங்கம், விவாத மேடை, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இலங்கை மலேசியா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து, 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை வழங்கினார்கள். ஓவிய கண்காட்சி, கர்நாடக இசை மற்றும் தொன்மையான இசைக் கருவிகளுக்கான கண்காட்சி, பரதநாட்டியகலைக்கான பிரத்யேக கண்காட்சி ஆகியவற்றின் பின்னணியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். இவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட கடம் இசை மேதை விக்கு விநாயகராம் பேசுகையில்,“ இசைத்துறைக்கு பிரிட்ஜ் அகாடமி செய்து வரும் சேவையை பாராட்டுகிறேன். அதிலும் குறிப்பாக இவர்கள் திறமையான ஆசிரியர்களையும் உருவாக்குவதை நான் மனதார வரவேற்கிறேன்.இது போன்ற விழாவில் வாசிப்பதற்கு எமக்கும் வாய்ப்பளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில்,“உலகஅளவில் இந்திய நுண்கலைகள் தனித்துவமான அடையாளம் கொண்டது. மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெறும் இசைவிழா உலகளவில் புகழ்பெற்றது. அந்த தருணத்தில் நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் நான் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். வடஇந்திய மற்றும் ஏனைய கலைஞகளுடன் ஒப்பிடும் போது,தென்னிந்திய கலைகள் மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியம் கொண்டது. நுண்கலைகளின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றிவரும் ப்ரிட்ஜ் அகாடமியின் சேவையை நான் மனதார வரவேற்கிறேன்” என்றார்.
ப்ரிட்ஜ் அகாடமியின் அறக்கட்டளை உறுப்பினரான செல்வகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
Related posts:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி அவர்கள் கலந்துகொள்கிறார்!
தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப் போவாதாக நடிகர் சிரஞ்சீவி அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி ஆளுநர் தமிழிசை!!
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பற்றி அவதூறு பரப்பியதால் மன்னை சாதிக் கைது
உலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்
நான் பாடகர் அந்தோணிதாசனின் ரசிகை! ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தொடக்க விழாவில் சின்னக்குயில் சித்ரா புகழாரம்.!!!
கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா தலைமையில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி.!!
சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தனர்!!
’80ஸ் ரீயூனியன்’ கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக மும்பையில் சந்தித்த எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள்.!!
நடிகர் தியாகராஜன் அந்தாதுன் ஹிந்தி திரைப்பட உரிமையை வாங்கியிருக்கிறார். ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் பிரஷாந்த்.