நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபரை கௌதம் கிட்ச்லு மணந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ் திரைப்பட உலகில் இயக்குநர் பேரரசு இயக்கிய பரத்தின் ‘பழனி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன் பின்னர் தமிழ் திரைப்படங்களில் நடிகர் சூர்யாவுடன் மாற்றான், தளபதி விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா,மெர்சல் நடிகர் தனுஷுடன் மாரி, ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுடன் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2′ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் தனது திருமணம் செய்யப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அப்போது அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதை உறுதி செய்தார்.
தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை மணமுடிக்க உள்ளேன் என அறிவித்தார்.
கௌதம் தொழில் முனைவோர் இண்டெரியர் வடிவமைப்பு வீட்டு அலங்காரம் ஈ-காமர்ஸ் தளமான டிஸ்கர்ன் லிவிங்கின் நிறுவனர் ஆவார்.
அவர் அறிவித்தப்படி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடிகை காஜல் அகர்வால் & கவுதம் திருமணம் நேற்று நடைபெற்றது.
தனது திருமணத்திற்கு முந்தைய நிச்சயதார்த்தம்.. மருதானி வைப்பது ஆகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் முடிந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என காஜல் அகர்வால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது












