நடிகை நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து இயக்க மாட்டேன் – பிரபல இயக்குனர்.
லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து அறம் 2 திரைப்படத்தை இயக்க மாட்டேன். என்று இயக்குனர்
கோபி நயினார் கூறியிருக்கிறார்.
இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் திரைப்படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் அறம் திரைப்படத்தால் நயன்தாராவுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
இந்த அறம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி வருவதாக இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அறம் 2 திரைப்படத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.
நடிகை நயன்தாரா நடிக்க மறுத்ததால்தான் இயக்குனர் கோபி நயினார் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அறம் 2 திரைப்படத்தில் நடிக்குமாறு இயக்குனர் கோபி நயினார் நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தையே நடத்தவில்லையாம்.
இந்த தகவலை இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
மேலும் அறம் 2 திரைப்படத்தை நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து நான் இயக்க மாட்டேன்
என்று இயக்குனர் கோபி நயினார் கூறியுள்ளார்.











