பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் புதுமுக இயக்குனர் மன்னிப்பு கோரினார்.

நடிகர் சூர்யா 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்துள்ள நடிகை ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்.

தற்போது அமேசான் பிரைம்!ஓடிடி இனையத்தளத்தில் வெளியாகி உள்ளது.

ஜே.ஜே.பிரட்ரிக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்தில் நேர்மையான வழக்கறிஞரான நடிகை ஜோதிகாவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தும். அப்படி நடத்தும் அமைப்புகளில் ஒன்றாக இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் ஒன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அந்த அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து திரைப்படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மாதர் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தங்கள் அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு தங்கள் இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம். இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் தங்களின் போராட்டங்களிலிருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். இவ்வாறு இயக்குநர் ஜே.ஜே. பிரட்ரிக் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!