அசுரன் தனுஷ் சூப்பர் டீலக்ஸ் விஜய்சேதுபதி ஒத்த செருப்பு & இமானுக்கு தேசிய விருது அறிவிப்பு.

சென்னை 22 மார்ச் 2021

கடந்த 2019 வருடம் விருதைப் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை.

எனவே 67-வது தேசிய திரைப்பட விருதுகளை இன்று மாலை 4 மணிக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள தேசிய பத்திரிக்கையாளர் மையத்தில் 2019 ஆண்டுக்கான இந்திய மொழி படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

அதன்படி…

சிறந்த சினிமா விமர்சகர் பிரிவில் சோஹினி சாட்டர்ஜிக்கு தேசிய விருது.

தமிழ் சினிமாவிற்கு மொத்தம் 7 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது.

அசுரன் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நடிகர் தனுஷ் 2வது முறையாக தேர்வு.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படத்திற்காக முதன்முறையாக தேசிய விருது பெற்றார் நடிகர் தனுஷ்.

தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்திற்கும் தேசிய விருது பெறுகிறார் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷ் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு.

சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் நடிகர் விஜய் சேதுபதி தேர்வு.

நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தின் பாடல்களுக்கான இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது அறிவிப்பு

இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்த இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் ஏஸ் தாணு தயாரித்திருந்தார்.

ஆவணப்பட பிரிவில் சிறந்த படத்தொகுப்பிற்காக அர்ஜூன் கெளரிசரியாவுக்கு தேசிய விருது.

சிறந்த படம் – அசுரன்,

சிறந்த நடிகர் – தனுஷ்,

சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி,

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாக விஷால்,

சிறந்த பாடல் இசையமைப்பாளர் – இமான்,

சிறந்த படம் சிறப்பு மென்ஷன் – ஒத்த செருப்பு சைஸ் 7,

சிறந்த ஆடியோகிராபி – ரசூல் பூக்குட்டி.