அசுரன்’ படத்தின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்.
வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘அசுரன்’. இந்த படம் அக்டோபர் மாதம் 4ம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 6 நாட்களில் படமாக்கப்பட்டதாகவும் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.











