அஜீத்குமாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது நடிகர் மாவீரன் நெப்போலியன்.

நடிகர் தல அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை பல நாட்களாக உள்ளதாக நடிகர் மாவீரன் நெப்போலியன் சமீபத்திய தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் நண்பர்களால் ‘’மாவீரன்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் மாவீரன் நெப்போலியன்.

நடிகர், தொழில் அதிபர் என இவருக்கு இரண்டு முகங்கள் உள்ளது.

அவருடைய மகனின் உடல் நலன் கருதி அமெரிக்காவில் குடியேறி விட்டார்.

அங்கே சென்ற பிறகும் அவர் திரையுலகத்தை மறக்கவில்லை.

ஹாலிவுட்டில் உருவாகியிருக்கும் ‘டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

அந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் நடிகர் மாவீரன் நெப்போலியன் வீடியோ காலில் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அத்தகைய ஒரு பேட்டியில் நடிகர் தளபதி விஜய் உடன் உள்ள பிரச்சனை பற்றி பேசி இருந்தார்.

போக்கிரி திரைப்படத்தின் போது நடிகர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக

அதன்பின் நடிகர் விஜய்யுடன் பேசுவதில்லை,
அவருடைய திரைப்படங்களை பார்ப்பதுமில்லை எனக்கூறினார்.

இந்நிலையில், நடிகர் தல அஜித்குமார் பற்றி நடிகர் மாவீரன் நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

அவர் கூறியதாவது: தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களுடன் நடித்து விட்டேன்,

நடிகர் தல அஜித்குமாருடன் தான் இன்னும் நடிக்கவில்லை.

நடிகர் தல அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

ஆனால் அவருடன் நடிப்பேன் ஆனால் உறுதியாக வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன்.

பாசிட்டிவான கதாபாத்திரம் கொடுத்தால் அவருடன் கண்டிப்பாக நடிக்க தயார்”

என நடிகர் மாவீரன் நெப்போலியன் கூறியுள்ளார்.