இந்தியாவில் டிக் டாக் செயலிககு இந்திய அரசு தடை விதிக்கப்பட்டதால் ரூபாய் 45000 கோடி வருவாய் இழப்பு என சீன ஊடகம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் ஜூன் மாதம் 15-ஆம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால் இருநாடுகளும் தங்களது எல்லையில் படைகளை குவித்து வருகின்றனர்.

சில தினங்களில் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்-டாக், ஹெலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா அரசு கண்டனம் தெரிவித்தும் உள்ளது.

இந்த நிலையில் சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ டிக்-டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான ‘பைட்-டான்ஸ்’ நிறுவனத்திற்கு ரூபாய் 45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

டிக்-டாக் செயலியை அமெரிக்காவை விட இந்தியாவில் 2 மடங்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசு தடை விதித்துள்ளதால் சீன செயலிகள் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!