அடுத்த 2020 ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் – ரஜினிகாந்தின் சகோதரர்*

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதற்காகவும், அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா, தனது குடும்பத்துடன் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய நாராயணா, ” அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். அவர் எதற்கும் ஆசைப்படாதவர். அரசியலுக்கு வந்தாலும் அவர் எதற்கும் ஆசைப்பட மாட்டார்” என்று கூறினார்.