அன்னையர் தினத்திற்கு நடிகர் ராகவ லாரன்ஸ் எடுக்கும் புதிய முயற்சி

நடிகர் ராகவ லாரன்ஸ் சமூக சேவைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். இந்நிலையில் வருகிற மே 12ம் தேதி அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற பெற்றோர்களை காக்கும் நோக்கில் ‘தாய்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் துவங்க இருக்கிறார். மேலும் தாயின் பெருமைகளையும், தியாகத்தையும் அனைவருக்கும் உணர்த்தும் வகையில் பாடல் ஒன்றையும் வரும் 12ம் தேதி வெளியிடவுள்ளார்.