நடிகர் சூரி வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோக்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

குடும்பத்தோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடும் நடிகர் சூரி

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 24 -ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரபல நடிகர் சூரி பொது மக்களை மிகழ்விக்கவும் அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தன் குடும்பத்தோடு இணைந்து தினம் ஒரு வீடியோ தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

நடிகர் சூரி வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோக்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவி தொகை ரூபாய் 1 லட்சம் வழங்கினார். மேலும் தனக்கு தொலைப்பேசி வாயிலாக அழைத்து உதவி கேட்கும் நலிந்த கலைஞர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார்.

உலகமே கண்டு அஞ்சும் கொரோனா வைரஸ் மிக விரைவில் இவ்வுலகிலிருந்து மறைய கடவுளை வேண்டி கொள்வதாகவும், அனைவரும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி இந்த இக்கட்டான சூழ்நிலையை வென்று வரவேண்டும் என்று நடிகர் சூரி கூறினார்.