அமலாபால் சர்ச்சை பேச்சு – ஆடை படத்தை தடை செய்ய கோரி பெண்கள் அமைப்பினர் புகார்

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகை அமலாபால் நடித்துள்ள படம் ‘ஆடை’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட அமலாபால், ஆடையில்லாமல் நடித்த போது, முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களான 15 அண்ணன்கள் மட்டும் உடன் இருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த விநாடியே அண்ணன்கள் என்று கூறிய 15 தொழில்நுட்ப கலைஞர்களையும் குறிப்பிட்டு, மகாபாரத பாஞ்சாலிக்கு கூட 5 கணவர்கள் தான் என்றும் தனக்கு 15 கணவர்கள் இருப்பதை உணர்ந்ததாக அமலா பால் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த படத்தின் மீது பெண் அமைப்புகள் பல இடங்களில் புகார் அளித்து படத்திற்கு தடை கோரி வருகின்றனர். இதனால் படக்குழு பதற்றத்தில் உள்ளனர்.