ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு

இயக்குநர் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் அதிக படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் அமலாபால். கவர்ச்சி விஷயத்திலும் தாராளம் காட்ட துவங்கி விட்டார். ராட்சசன் படத்தை தொடர்ந்து ஆடை, அதோ அந்த பறவைப்போல மற்றும் ஒரு சில மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவற்றில் ஆடை படத்தை மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமார் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோதே விமர்சனங்கள் எழுந்தன. மேலும் படத்தில் ஆபாசம் அதிகம் இருப்பதன் காரணமாக தணிக்கையில் இப்படத்திற்கு ஏ சான்று கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஆடை படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 1.43 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில் அமலாபால் அலுவலகம் ஒன்றில் அமலாபால் உடலில் ஒட்டு துணியின்றி நடித்திருக்கிறார். அமலாபாலின் துணிச்சலான நடிப்பை பலர் பாராட்டினாலும் மற்றொருபுறம் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்தும் வருகிறார்கள்.