ஆர்.பார்த்திபனின் பணிவான வணக்கம். 2020 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த 2020 ஆங்கிலப் புத்தாண்டை நல்ல விதமாக வரவேற்று கொண்டாடும் விதமாக 2020 குழந்தைகளுடன் பலூன் பறக்கவிட்டு, அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையிலான ஒரு சிறிய பரிசும் அளித்து, நாளைய தினத்தை கொண்டாட முடிவு செய்திருக்கிறேன். இதே போல, நான் 2000 குழந்தைகளுடன், 2000 புதுவருட தினத்தை கொண்டாடினேன்.
பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் மூலம் நான் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவது நீங்கள் அறிந்ததே. எனது சுயவருமானத்தில் சுமார் நாற்பது சதவீதம் என என்னால் முடிந்த உதவிகளை நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் இதில் ஈடுபட்டு வருகிறேன். அது எனக்கு ஈடு இணையற்ற ஒரு மனநிறைவை அளிக்கிறது.
பார்த்திபன் மனிதநேய மன்றம் மற்றும் ழகரம் என்ற சமூக சேவை அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறோம். நாளை காலை பலூன்களோடு துவங்கும் இந்நிகழ்ச்சி, ரோபோ சங்கர் மற்றும் இசை அமைப்பாளர் சத்யா ஆகியோருடன் ஒரு சிறிய போழுதுபோக்கு நிகழ்ச்சி, பின்னர் மதிய உணவு என தொடர்கிறது. நிறைவாக அன்றாடம் அந்த மாணவச் செல்வங்களுக்கு உதவக்கூடிய ஒரு டிபன் பாக்ஸ் பரிசுடன் அன்றைய தினம் நிறைவு பெறுகிறது.
இந்த நிகழ்ச்சி பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. கோவில், சர்ச், மசூதி என வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புத்தாண்டை வரவேற்கும் நிலையில், நாங்கள் இவ்வாறாக இந்த குழந்தைகளுடன் 2020 புத்தாண்டை வரவேற்க இருக்கிறோம்.
நாள்: நாளை 01:01:2020(புதன் கிழமை)
நேரம்: காலை 10.30 மணி
இடம்: கார்ப்ரேஷன் பெண்கள் மேல் நிலை பள்ளி
பள்ளி சாலை
சின்னையன் காலனி
பெரம்பூர்
சென்னை-11











