இசைஞானி இளையராஜாவை தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்தித்தார் பிரபல நடிகை*

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகர் ராதிகா. தற்போது கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘மருதா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி அருகே நடைபெறுகிறது. இந்நிலையில் திருமணம் ஒன்றிற்காக தேனி வந்திருந்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இதனை அறிந்த நடிகை ராதிகா, பாரதிராஜாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

சமீபத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இசையமைப்பாளர் இசைஞானி இளையாராஜா – பாரதிராஜாவின் சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.