நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்த பிரபலங்கள்*

இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா இருவரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்களாக இருந்தவர்கள். கடந்த 2013ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா மேடையில் இளையராஜாவைப் பற்றி விமர்சித்துப் பேசிய பின் இருவரும் பிரிந்தார்கள். இந்நிலையில் இன்று தேனி, வைகை அணையில் திடீரென இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். இது குறித்து பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும், இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது, என் தேனியில்” என பதிவிட்டு, புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!