இந்தியாவிலேயே மிக உயரமான எந்த நடிகருக்கும் இல்லாத கட்-அவுட்., சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. 

இந்தப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் இந்தியாவிலேயே மிக உயரமான கட்-அவுட் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த மாதம் 17-ஆம் தேதி திருவள்ளூர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக பூஜை போடப்பட்டு முழூவீச்சில் வேலைகள் நடந்தன.

இதற்கு முன் சர்கார் படத்துக்காக கேரளாவில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்துக்காக அஜித்துக்கு திண்டுக்கல்லில் 190 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும் தான் மிகப்பெரிய கட்-அவுட்டுகளாகும். இவற்றை விட உயரமாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கட்-அவுட் வேலை இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதன் உயரம் சுமார் 215 அடி என்று கூறப்படுகிறது.