தல அஜித்குமாரின் புதிய லுக் ரசிகர்கள் உற்சாகம்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கும், அதில் வழக்கறிஞராக நடித்த அஜித்குமாருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்க்ஷன் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றன. இந்நிலையில், விமான நிலையத்தில், தனது வழக்கமான சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக, க்ளீன் ஷேவ் செய்து கருமையான முடியுடன், கோட் சூட் அணிந்து வந்த அஜித்குமாரை பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 

 

error: Content is protected !!