இந்த “பொன்மகள் வந்தாள்” கண்களை கலங்கடித்து விட்டது கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும்.” இயக்குனர் இமயம் பாராட்டு !
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக நேரடியாக OTT இனையத்தளத்தில் வெளியாகும். திரைப்படம் “பொன்மகள் வந்தாள்’
தமிழ் திரைப்பட உலகில் OTT இனையத்தளத்தில் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த “பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் நடிகை ஜோதிகா முதன் முறையாக வக்கீல் வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இயக்குனர்கள்
கே. பாக்யராஜ், பிரதாப் போத்தன், ஆர்.பார்த்திபன், தியாகராஜன் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் நடிகை ஜோதிகா நடிக்கும் புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’ இந்த திரைப்படம் இன்று மே 29ம் தேதி ஒடிடி இனையத்தில் அமேசான் பிரைம் விடியோவில் வெளி வந்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நடிகரும் இயக்குனர் இமயமான பாரதிராஜா கண்களை கலங்கடித்து விட்டது. இந்த “பொன்மகள் வந்தாள்” கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும். என்று மிக வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது திரைப்படம் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“அரியாத வயதில் காமத்தை சுமந்து, வெளியில் சொல்லா முடியா வாழும், பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான ஒரு பாடம். இயக்குநரின் இயக்கமும், ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களை கலங்கடித்து விட்டது. இந்த ’பொன்மகள் வந்தாள்’ கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள தமிழ் திரையுலக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்
— Bharathiraja (@offBharathiraja) May 28, 2020
கண்களை கலங்கடித்து விட்டது. இந்த "பொன்மகள் வந்தாள்" கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும்.. @Suriya_offl #Jodhika #bakyaraj @rparthiepan @imKBRshanthnu @2D_ENTPVTLTD #prathappothan @fredrickjj #pandirajan
— Bharathiraja (@offBharathiraja) May 28, 2020










