இன்று மாலை விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்காத அப்டேட்!

விஜய் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் அதேவேளையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி ட்வீட் செய்துள்ளார். அதில், இந்த படத்தின் சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், ரசிகர்கள் எதிர்பார்க்காத அறிவிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.