இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கர்ணன்’.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கர்ணன்’.
இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படத் தலைப்பு தொடர்பாக கே. சந்திரசேகரன்,
தலைவர், சிவாஜி சமூகநலப்பேரவை சேர்ந்தவர் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்
அதில்…
“கர்ணன்” – இந்தப் பெயர் மகாபாரதக் கதாபாத்திரம் மட்டுமல்ல, நடிகர்திலத்தின் தோற்றம், கம்பீரம், நடை என்று பல பரிமாணங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய திரைப்படம்.
இன்று, ஏதோ ஒரு கதைக்கு “கர்ணன்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நமது கண்டனத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, திரைப்படப் பெயர்களை பதிவு செய்யும், தமிழ் பிலிம் சேம்பர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தெரிவித்திருக்கிறோம்.
ஆனாலும், தற்போது வெளியாகியுள்ள ஒரு வார இதழில் தனுஷ் நடிக்கும் “கர்ணன்”: திரைப்படத்தைப் பற்றி ஒரு கவர் ஸ்டோரி வெளியாகியுள்ளது.
அதில், “கர்ணன்” கொடுப்பவன் அல்ல. உரிமைகளைக் கேட்பவன் என்று வந்துள்ளது.
“கர்ணன்” என்றாலே கொடுப்பவன்தான். உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்களைக்கூட பெயர்த்தெடுத்து தானமாகக் கொடுத்தவன். இறக்கும் தருவாயிலும், இல்லை என்று சொல்லாமல் தன்னுடைய புண்ணியங்களையெல்லாம், ரத்தத்தால் தாரை வார்த்துக் கொடுத்தவன்.
அப்படியிருக்கையில், உரிமைகளைக் கேட்கும் ஒரு கேரக்டருக்கு :”கர்ணன்” என்று ஏன் பெயர் வைக்கவேண்டும்?
“போராளி”:, “உரிமைக்குரல்” என்று வேறு ஏதாவது பெயரை வைத்திருக்கலாமே?
இவ்வாறு அவர் தன் முக நூலில் பதிவிட்டுள்ளார்.