இயக்குனர் வெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் உருவாக இருந்தது. சிம்புதேவன் – வடிவேலு இடையேயான கருத்து வேறுபாட்டால் படம் பாதியிலேயே நிற்கிறது. இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த படத்திற்க கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.

பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைப்பதாக கூறப்படுகிறது