மாநாடு திரைப்படத்திற்கு காட்சியை காப்பி அடித்தேன் என வெக்கமே இல்லாமல் பகிரங்கமாக உளறினார் இயக்குனர் வெங்கட் பிரபு.!
சென்னை 23 ஆகஸ்ட் 2022 மாநாடு திரைப்படத்திற்கு காட்சியை காப்பி அடித்தேன் என வெக்கமே இல்லாமல் பகிரங்கமாக உளறினார் இயக்குனர் வெங்கட் பிரபு.!
இந்த மாநாடு திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்
இந்த மாநாடு திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார்.
நடிகர் சிலம்பரசன் டிஆருக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு கம் பேக் கொடுத்த திரைப்படம் மாநாடு திரைப்படம் அமைந்தது.
மேலும் நடிகர் சிலம்பரசன் டிஆருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.
திரைப்படத்தில் வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்து அசத்தியிருந்தார்.
இந்த மாநாடு திரைப்படம் வெளியாகி 100 நாள்களை கடந்தும் வெற்றி வாகை சூடியது.
நடிகர் சிலம்பரசன் டிஆரின் கெரியரில் ரிஎன்ரி திரைப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார்.
இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.
இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.
இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, வெற்றிமாறன் உட்பட பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் கடைசி காட்சி சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இருந்து காப்பி அடித்ததுதான் என இயக்குனர் வெங்கட் பிரபு பகிரங்கமாக கூறினார்.
அதாவது ஷார்டுக்கு ஷார்ட் மாறி வரும் சீன்களை உங்க திரைப்படத்தில் இருந்து தான் எடுத்தேன் என இயக்குனர் பா.ரஞ்சித் முன்னாடியே இயக்குனர் வெங்கட் பிரபு பகிரங்கமாக ஒத்துக்கொண்டார்.
காபி கேட் வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து இருக்கிறார்.











