இயக்குனர் ஷங்கர் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

கடந்த 2010ம் ஆண்டு ரஜினி, ஐஸ்வர்யா நடிப்பில் வெளியாகிய படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும். தான் எழுதிய ‘ஜூகிபா’ என்ற கதையை தழுவி ‘எந்திரன்’ படம் எடுத்துள்ளனர் என்றும், பிரபல எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கரும், படத்தின் தயாரிப்பாளரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி வழக்கு தொடுத்துள்ள தமிழ் நாடனின் ‘ஜூகிபா’ கதைக்கும், ‘எந்திரன்’ படத்தின் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் காப்புரிமைச் சட்டப்படி இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு தொடுக்க போதிய முகாந்திரம் உள்ளது. எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. படத்தின் தயாரிப்பாளருக்கும், கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும் இந்த வழக்கில் ஷங்கர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.