இணையத்தில் ட்ரெண்டாகும் இயக்குனர் அட்லி & பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இனையும் படத்தலைப்பு
இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் அட்லி.
அதன்பின்னர் ராஜா ராணி என்ற படத்தை இயக்கிய ஒட்டு மொத்த காதலர்களையும் கவர்ந்தார்.
இதனையடுத்து தளபதி விஜய்யின் தெறி படத்தை இயக்கினார். இந்த படம் ஹிட்டடிக்கவே விஜய்யின் மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.
பிகில் படம் தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனிடையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை இயக்குனர் அட்லி இயக்கவுள்ளதாக வந்த தகவல்களை பார்த்தோம்.
தற்போது அது உறுதியாகியுள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.
இந்த படத்திற்கு சங்கி என்ற தலைப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆகிறது.
நவம்பர் 2ஆம் தேதி ஷாரூக்கான் பிறந்தநாள் அன்று பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இது நிஜமா? அல்லது பொய்யா? விரைவில் தெரியவரும்.
Sanki என்றால் ‘சாதாரணமானவன் அல்ல’ என்று பொருள் உள்ளதாம்.











