நான்கு பக்கத்தில் இருந்தும் பல ஊமை குத்துகள் விழுங்குவதால் பயந்து போன இயக்குனர் சந்தோஷ் பி ஜெயாகுமார் இயக்குநர் பாரதிராஜாவுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை : 10 அக்டோபர் 2020
தமிழ் திரைப்பட உலகில் மூத்த இயக்குநரும் நடிகருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஆலோசனையை நக்கல் அடித்ததால் திரையுலகம் உட்பட பல முனைகளில் சரமாரியாக விழுந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் இயக்குநருக்கு நான்கு பக்கத்தில் இருந்தும் பல ஊமை குத்துகள் விழுங்குவதால் பயந்து போன இரண்டாம் குத்து திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயாகுமார் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில்
இரண்டாம் குத்து திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்து உள்ளேன்.
அதன் போஸ்டர்கள் டீசருக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையை படித்து விட்டு வந்த கணத்தில் வெப்பத்தில் எனது டுவிட்டர் பதிவில் ஒரு டுவீட் போட்டு விட்டேன்.
அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்க கூடாது.
என்று மனம் கூறியது ஆகவே நான் போட்ட டுவிட்டுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் பாரதிராஜா அவர்கள் அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்து விட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள்.
பல்வேறு இயக்குனர்களுக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.
இருக்கிறார் எப்போதும் இருப்பார் அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக் கூடாது.
இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு இயக்குனர் சந்தோஷ் பி ஜெயாகுமார் இந்த அறிக்கையில் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
https://twitter.com/santhoshpj21/status/1314920207119392768?s=19











