தனது தந்தையை இயங்கும் திரைப்படத்திற்கு மார்கழி திங்கள் என தலைப்பை வைத்திருக்கிறார்  இளைய இயக்குனர் இமயம் மனோஜ் பாரதிராஜா.!!

தனது தந்தையை இயங்கும் திரைப்படத்திற்கு மார்கழி திங்கள் என தலைப்பை வைத்திருக்கிறார்  இளைய இயக்குனர் இமயம் மனோஜ் பாரதிராஜா.!!

சென்னை 31 மார்ச் 2023  இயக்குநர் சுசீந்திரன் அவர்களின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுடைய மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா அறிமுகம் ஆகிறார்.

இந்த நிலையில் இந்தப் திரைபடத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என்று தலைப்பிட்டு டைட்டில் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் மிக மிக  முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள் நடிக்க உள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இந்த திரைப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜி வி பிரகாஷ் குமார் இசையில் உருவாகவுள்ள இந்த மார்கழி திங்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் திரைப்படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.