உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

நடிகர் இயக்குனர் பாடலாசிரியர் என பன்முக திறமைகள் கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில்  இயக்கிய கனா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த கனா திரைப்படத்தை தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக்காகி படம் ஹிட்டானது.

தற்போது இவரது அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்காக பிசியாக இருக்கிறார் அருண் ராஜா காமராஜ்.

இந்தத் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிகபூர் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் குமார் நடித்த நேர்கொண்டபார்வை மற்றும் தற்போது நடித்து வரும் வலிமை ஆகிய திரைப்படங்களை போன கமல் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.